»   »  பத்மஸ்ரீ வாங்கிட்டேன், பத்மபூஷண் கொடுங்க... -பிரபல நடிகை; ரெண்டும் ஒண்ணுதாங்க...- மத்திய அமைச்சர்!

பத்மஸ்ரீ வாங்கிட்டேன், பத்மபூஷண் கொடுங்க... -பிரபல நடிகை; ரெண்டும் ஒண்ணுதாங்க...- மத்திய அமைச்சர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பழம்பெரும் இந்தி நடிகை ஆஷா பரேக், தனது பெயரை பத்மபூஷண் விருதுக்கு சிபாரிசு செய்யுமாறு மத்திய அமைச்சர் நிதின் கட்காரியிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுபற்றி மராட்டிய மாநிலம் நாக்பூரில் ஒரு நிகழ்ச்சியில் நிதின் கட்காரி பேசுகையில், "பத்ம விருதுகள் வழங்குவதெல்லாம் இப்போது பெரிய தலைவலியாகி விட்டது. சிபாரிசு கேட்டு எண்ணற்ற கடிதங்கள் எனக்கு வருகின்றன. நானே சுமார் ஆயிரம் சிபாரிசுகளை அனுப்பி வைத்துள்ளேன்.

ஒரு நாள் என்னை மும்பை வீட்டில் சந்திக்க ஒரு பெண் வந்தார். ‘லிப்ட்' இயங்காததால், 12 மாடிகளையும் நடந்தே ஏறி வந்து விட்டார்.

Asha Parekh and many others chased me for Padma Awards - Kadkari

ஆஷா பரேக் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட அவர், தான் ஏற்கனவே பத்மஸ்ரீ விருது வாங்கி விட்டதாகவும், பத்மபூஷண் விருதுக்கு தனது பெயரை சிபாரிசு செய்யுமாறும் கேட்டுக்கொண்டார். திரையுலகுக்கு ஆற்றிய சேவைகளுக்காக, விருதுக்கு தான் தகுதியானவள் என்றும் அவர் கூறிக்கொண்டார். பத்மஸ்ரீயும், பத்மபூஷணும் ஒன்றுதான் என்று நான் கூறினேன். ஆனால், அவர் அதை ஏற்கவில்லை," என்றார்.

ஆஷா பரேக் தீஸ்ரி மன்ஸில், கதி பதங், கேரவன் உள்ளிட்ட பல பிரபல இந்திப் படங்களில் நாயகியாக நடித்தவர்.

English summary
Union minister Nitin Gadkari has said that veteran actress Asha Parekh had approached him seeking recommendation for Padma Bhushan and that many others have been "chasing" him as they want the highest civilian honours. He said giving away Padma awards has become a "headache" these days.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil