»   »  ரஜினியுடன் பயணம் செய்த சந்தானம் நாயகி!

ரஜினியுடன் பயணம் செய்த சந்தானம் நாயகி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கபாலி படப்பிடிப்புக்காக மீண்டும் மலேசியா புறப்பட்டுச் சென்றுள்ளார் ரஜினிகாந்த்.

கபாலி படத்தின் மூன்று கட்டப் படப்பிடிப்பு முதலில் சென்னையிலும், பின்னர் மலேஷியா மற்றும் சென்னையிலும் படமானது.


Ashna Zaveri's unforgettable moment with Rajinikanth

இப்போது இறுதிக் கட்டப் படப்பிடிப்பு மலேஷியாவில் நடக்கிறது. இதற்காக நேற்று முற்பகல் 11 மணிக்கு சென்னையிலிருந்து விமானத்தில் கிளம்பினார் ரஜினி.


அதே விமானத்தில் ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' படத்தில் கதாநாயகியாக அறிமுகமான ஆஸ்னா சவேரியும் பயணம் செய்துள்ளக செய்தார்.


சூப்பர் ஸ்டார் ரஜினியை விமானத்தில் பார்த்ததும் பரவசமான ஆஸ்னா சவேரி அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். பின்னர், தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த புகைப்படத்தை பதிவு செய்து, இன்றைய நாள் என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத சிறப்பான நாள் என்று குறிப்பிட்டுள்ளார்.ஆஸ்னா சவேரி தற்போது ‘மீன்குழம்பும் மண்பானையும்' என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புக்காகவே அவரும் மலேசியா சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


English summary
Ashna Zaveri, the heroine of Santhanam's Vallavanukku Pullum Aayutham has taken a selfie with Rajinikanth and publish the same in twitter.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil