Don't Miss!
- Sports
பாக். வீரர் சையது ஆப்ரிடி மகளை மணந்த ஷாகின் ஆப்ரிடி.. காதலுக்கு பச்சை கொடி.. ரசிகர்கள் நெகிழ்ச்சி
- News
தமிழ்நாடு தன்னுரிமை கழகம்.. புதிய கட்சியை துவக்கிய ‛சர்க்கார்’ வில்லன் பழ கருப்பையா.. கொடிய பாருங்க!
- Lifestyle
இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் தமனி சுவர்களில் அதிகளவு கொழுப்பு படிந்துள்ளதாம்... இது உயிருக்கே ஆபத்தாம்!
- Automobiles
திடீரென உயர்த்தப்பட்ட பெட்ரோல்/டீசல் விலை! பட்ஜெட்டில் வெளியான பகீர் ஆய்வு!
- Technology
ஒப்போ ரெனோ8 டி 5ஜி ஃபர்ஸ்ட் லுக்: பவர்-பேக்டு அம்சங்களுடன் இன்னொரு பவர்ஃபுல் ஸ்மார்ட்போன்!
- Finance
இண்டிகோ: லாபம் 1000% வளர்ச்சி..! அடேங்கப்பா, என்ன காரணம் தெரியுமா..?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
இவருக்கு கன்னி ராசியா இருக்குமோ..3 ஹீரோயின்கள்..அசோக் செல்வனின் நித்தம் ஒரு வானம் ரிலீஸ் தேதி!
சென்னை : நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள நித்தம் ஒரு வானம் படம் குறித்த முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.
தமிழ் திரையுலகின் வளர்ந்து வரும் நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் அசோக் செல்வன். பில்லா 2 படத்தில் இளம் வயது அஜித்தாக நடித்து திரையுலகில் அறிமுகமானார்.
சூதுகவ்வும், பீட்சா-2, தெகிடி என வித்தியாசமான கதையம்சம் உள்ளிட்ட படங்களில் தொடர்ந்து நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.
பிறந்தநாள் அதுவுமா கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்-ஐ வெறுப்பேற்றிய லெஜண்ட் ஹீரோயின்.. இப்படியா?

ஓ மை கடவுளே
இவர் நடிப்பில் ஓ மை கடவுளே திரைப்படத்தில் நடித்தார் இந்த திரைப்படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. இந்த படத்தில் ஜாலியான நண்பன், கோபப்படும் கணவன்,தனக்கு பிடித்த பெண்ணை உருகி உருகி காதலிக்கும் காதலன் என பலவிதமான ரோலில் நடித்திருந்தார். இந்த படத்தில் வாணி போஜன், ரித்திகா சிங் என இரண்டு ஹீரோயின்கள்.

மன்மத லீலை
அதே போல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில், மன்மத லீலை என்ற அடல்ட் காமெடி திரைப்படத்தில் நடித்தார். இப்படத்தில், அசோக் செல்வனுக்கு ஸ்மிருதி வெங்கட், சம்யுக்தா ஹெக்டே, ரியா சுமன் என 3 கதாநாயகிகளுடன் நடித்திருந்தார் அசோக் செல்வன். படத்தில் கசமுசா, லிப் லாங் காட்சி என மனுஷன் வாழ்த்தி இருந்தார்.

நித்தம் ஒரு வானம்
இந்நிலையில் அசோக்செல்வன் நித்தம் ஒரு வானம் படத்தில் நடித்துள்ளார். இந்தபடத்திலும் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் நடிகை ரித்து வர்மா, சூரரைப்போற்று புகழ் அபர்ணா பாலமுரளி, சிவ ஆத்மிகா ஆகிய மூன்று கதாநாயகிகள் அசோக் செல்வனுடன் நடித்துள்ளனர். 3 பேருக்குமே சமமான முக்கியத்துவம் கொடுத்து கதை உருவாக்கப்பட்டுள்ளது.

ரிலீஸ் தேதி
இப்படத்தை இயக்குநர் கார்த்திக் இயக்கி உள்ளார், கடந்த செப்டம்பர் 23ந் தேதி இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. ஆயுதபூஜையை முன்னிட்டு நித்தம் ஒரு வானம் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் நவம்பர் 4 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கன்னி ராசியா இருக்குமோ
படம் தொடர்பான போஸ்டரை படக்குழுவினர் தங்களது சமூக வலைத்தளப் பக்கங்களில் பதிவிட்டுள்ளனர்.இந்த படத்தில் 3 கதாநாயகிகள் இருப்பதை பார்த்த ரசிகர்கள் ஓ மை கடவுளே படத்தில் இரண்டு ஹீரோயின், மதன்மதலீலையில் 3 ஹீரோயின்,இந்த படத்திலும் 3 ஹீரோயின் மனுஷனுக்கு கன்னி ராசியா இருக்குமோ என கிண்டலாக கேட்டு வருகின்றனர்.