»   »  தொடாம நடிக்கிற டி.ஆர்.னு நெனச்சியா, உதட்டை கடுச்சு இழுக்கிற எஸ்.டி.ஆர். டா!

தொடாம நடிக்கிற டி.ஆர்.னு நெனச்சியா, உதட்டை கடுச்சு இழுக்கிற எஸ்.டி.ஆர். டா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சிம்புவின் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தின் அஸ்வின் தாத்தா டீஸர் அனைவரையும் கவர்ந்துள்ளது.

சிம்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் நடித்து வருகிறார். இதில் சிம்பு மூன்று வித்தியாசமான வேடங்களில் வருகிறார்.


சிம்பு அஸ்வின் தாத்தா என்ற வயதான கெட்டப்பில் படத்தில் வருகிறார். வயதான சிம்புவை உருகி உருகி காதலிக்கும் பெண்ணாக நடிக்கிறார் தமன்னா. இந்நிலையில் அஸ்வின் தாத்தா டீஸர் வெளியாகியுள்ளது.


டீஸர் அருமையாக வந்துள்ளது என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.


அஸ்வின்

அஸ்வின்

டீஸரில் ஒரு தாத்தா டே அஸ்வின் டே அஸ்வின் என்று கூப்பிட ரவுடிகளோ கிழட்டு பிரெண்டுடா என்று கூறி சிரிக்க கதவை உடைத்துக் கொண்டு வருகிறார் அஸ்வின் தாத்தா.


தாத்தா

தாத்தா

தாத்தான்னா நடக்க முடியாம, கண்ணு தெரியாம, காது கேட்காத தாத்தாவை தான் நான் பார்த்திருக்கிறேன். உன்னை எவளா இருந்தாலும் லவ் பண்ணுவா என்று அஸ்வின் தாத்தாவிடம் கூறுகிறார் தமன்னா.


முதல் முறையாக

முதல் முறையாக

தமன்னா அஸ்வின் தாத்தாவை கொஞ்சி முத்தம் கொடுக்க தமிழ் சினிமாவிலேயே முதல் முறையாக இப்படியொரு லவ் ஸ்டோரி என சிம்பு கூறுகிறார்.


எஸ்டிஆர்

இந்த படத்துல பொண்ணுங்கள கூட தொடாம நடிப்பாரே அந்த டி.ஆர்.னு நெனச்சியாடா? அதே படத்துல தொட்டு உதட்டை கடுச்சு இழுக்கிற எஸ்டிஆர் டா என்கிறார் சிம்பு. கோவை சரளா சிம்புவை சைட் அடிக்கும் காட்சியும் அருமை.


English summary
Ashwin Thatha teaser starring Simbu in old get up has impressed the fans. Even super star Rajini called Simbu and appreciated after seeing the taser.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil