»   »  அசின் தான் என் உலகம்: ட்விட்டரில் காதலை தெரிவித்த ராகுல்

அசின் தான் என் உலகம்: ட்விட்டரில் காதலை தெரிவித்த ராகுல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: நடிகை அசின் தான் தனது உலகம் என்று கூறி அவரது கணவரும், மைக்ரோமேக்ஸ் நிறுவனருமான ராகுல் சர்மா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

கோலிவுட்டில் இருந்து கிளம்பி பாலிவுட்டுக்கு சென்ற அசின் அங்கேயே செட்டில் ஆகிவிட்டார். இந்நிலையில் அவருக்கும், மைக்ரோமேக்ஸ் நிறுவனர் ராகுல் ஷர்மாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டது.

இதையடுத்து கடந்த 19ம் தேதி டெல்லியில் அவர்களின் திருமணம் கிறிஸ்துவ முறைப்படியும், இந்து முறைப்படியும் நடந்தது. அதன் பிறகு திரையுலகப் பிரபலங்கள் உள்ளிட்டோருக்காக பிரம்மாண்ட திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

மும்பையில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏராளமான பிரபலங்கள் வந்திருந்தனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை ராகுல் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அசினை கட்டிப்பிடித்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, என் உலகை என் கையில் பிடித்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

English summary
Asin's husand Rahul tweeted a picture of the couple hugging at their wedding reception, which was held in Mumbai, and he captioned it, “Holding MY WORLD in my arms!!!”

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil