»   »  இந்த வருடம் மலையாள நட்சத்திரங்களின் திருமண வருடம்

இந்த வருடம் மலையாள நட்சத்திரங்களின் திருமண வருடம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்த 2015 ம் வருடம் மலையாள திரையுலகத்தினருக்கு நல்ல ஒரு ஆண்டாக அமைந்து விட்டது போல, தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து வருகிறது மலையாள திரையுலகம்.

அதே போன்று இந்த வருடம் மலையாளத்தின் நிறைய நட்சத்திரங்கள் மணமேடையில் அமர இருக்கின்றனர், அசின், பானு தொடங்கி இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் வரை இந்த வருடத்தில் மொத்தம் 5 பேர் மணவாழ்க்கையில் நுழைய இருக்கின்றனர்.

மலையாள நட்சத்திரங்கள் என்றாலும் தமிழிலும் நமக்கு நன்கு பரிச்சயமானவர்கள் என்பதால் அவர்கள் ஐவரைப் பற்றியும் இங்கே பார்க்கலாம்.

அசின்

அசின்

மலையாள உலகில் அறிமுகமாகி தமிழில் நல்ல நடிகையாக பெயரெடுத்தவர் நடிகை அசின், தமிழில் இவர் நடித்த கஜினி மாபெரும் ஹிட்டடிக்க இந்தி கஜினியில் நாயகியாக நடித்ததன் மூலம் பாலிவுட்டில் பாதம் பதித்தார். பாலிவுட்டில் பெரிய அளவில் ஜொலிக்க முடியவில்லை, ஆனால் பாலிவுட்டிற்கு சென்றதன் மூலம் மணமேடைக்கு தயாராகி விட்டார். மைக்ரோமேக்ஸ் மொபைல் நிறுவனத்தின் இணை நிறுவனரான ராகுல் ஷர்மாவிடம் காதலில் விழுந்த அசின், விரைவில் கெட்டிமேளம் கொட்டத் தயாராகி விட்டார். இந்த வருட இறுதிக்குள் இவர்கள் இருவரின் திருமணமும் நடைபெறலாம்.

முக்தா என்கிற பானு

முக்தா என்கிற பானு

நடிகை முக்தா தமிழில் தாமிரபரணி படத்தில் விஷாலின் ஜோடியாக நடித்த பானுவின் நிஜப்பெயர் முக்தா. பிரபல பாடகர் ரிம்மி டோமிசின் சகோதரர் ரிங்குவை தான் மணமுடிக்க இருப்பதாக தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார் முக்தா, இந்த மாத இறுதியில் 30 ம் தேதியன்று கொச்சியில் உள்ள எடப்பள்ளி சர்ச்சில் பானுவின் திருமணம் நடைபெற உள்ளது.

அர்ச்சனா கவி

அர்ச்சனா கவி

மலையாளத்தில் பிரபல நடிகையும் தமிழில் அரவான் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவருமான நடிகை அர்ச்சனா கவி, பிரபல காமெடி நடிகர் அபிஷ் மேத்யூ வை விரைவில் மணம் புரியவிருக்கிறார். ஆனால் அர்ச்சனா கவி தனது திருமணத்தை இன்னும் ஊடகங்கள் முன்னிலையில் உறுதி செய்யவில்லை.

சரண்யா மோகன்

சரண்யா மோகன்

தமிழில் ஒரு நாள் ஒரு கனவு திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி யாரடி நீ மோகினி மூலம் ரசிகர்களின் நெஞ்சங்களைக் கவர்ந்த நடிகை சரண்யா மோகன், பல் மருத்துவரான அரவிந்த் கிருஷ்ணனை மணம் புரியவிருக்கிறார். தனது பேஸ்புக் பக்கத்தின் மூலம் இதனை உறுதிபடுத்தியிருக்கும் சரண்யா மோகனின் திருமண தேதி இன்னும் முடிவாகவில்லை.

நேரம் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன்

நேரம் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன்

தமிழில் வெளிவந்த நேரம் திரைப்படத்தின் இயக்குனருக்கு தற்போது மண வாழ்க்கையில் நுழைய நேரம் வந்து விட்டது, மலையாள தயாரிப்பாளர் ஆல்வின் ஆண்டனியின் மகள் அலினா மேரியை வருகின்ற 22 ம் தேதி மணம் முடிக்கவிருக்கிறார் அல்போன்ஸ், முன்னதாக நாளை(17) ம் தேதி இருவரின் நிச்சயதார்த்தமும் நடைபெற உள்ளது.

சும்மா ஊரே மெச்சுற மாதிரி வாழ்ந்து காட்டணும் ஓகே ...

English summary
Asin Thottumkal, Muktha, Archana Kavi, Saranya Mohan and director Alphonse Puthren, Many celebrities from Kerala are planning to get married this year.
Please Wait while comments are loading...