»   »  கல்யாணமாயிருச்சு.. ரிசப்ஷன் வச்சிருக்கோம்... வந்துருங்க.. தென்னிந்திய விஐபிகளுக்கு அசின் அழைப்பு!

கல்யாணமாயிருச்சு.. ரிசப்ஷன் வச்சிருக்கோம்... வந்துருங்க.. தென்னிந்திய விஐபிகளுக்கு அசின் அழைப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை அசின் - மைக்ரோமேக்ஸ் இணை நிறுவனர் ராகுல் சர்மாவின் திருமணம் நேற்று டெல்லியில் உள்ள பிரபல ஹோட்டலில் எளிமையாக நடைபெற்றது.

மலையாள நடிகையான அசின் தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தபோது கஜினி படத்தின் மூலம் பாலிவுட் வாய்ப்பு வந்தது.

ஆனால் கஜினி தவிர வேறு படங்கள் எதுவும் ஓடவில்லை எனினும் மைக்ரோமேக்ஸ் இணை நிறுவனர் ராகுல் சர்மாவுடன் அசினுக்கு காதல் மலர்ந்தது.

அக்ஷய்குமார்

அக்ஷய்குமார்

கஜினி படத்தின் மூலம் பாலிவுட் சென்ற நடிகை அசினுக்கு இந்தி நடிகர் அக்ஷய்குமார் மூலம் மைக்ரோமேக்ஸ் இணை நிறுவனர் ராகுல் சர்மாவின் நட்பு கிடைத்தது. நாளடைவில் அது காதலாக மாற கடந்த சில வருடங்களாக இருவரும் காதலித்து வந்தனர்.

திருமணம்

திருமணம்

இவர்கள் திருமணத்திற்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்த பின் எந்த முறைப்படி திருமணம் செய்வது என்ற குழப்பம் இருவருக்கும் எழுந்தது. கடைசியில் இந்து, கிறிஸ்தவ முறைப்படி 2 முறை திருமணம் செய்து கொள்ளலாம் என்ற முடிவுக்கு இருவரும் வந்தனர்.

2 திருமணம்

2 திருமணம்

இதன்படி நேற்று காலை அசின் - ராகுல் சர்மா இருவரும் சர்ச்சில் மோதிரம் மாற்றி கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். பின்னர் மாலையில் இந்து முறைப்படி இருவரும் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.இந்தத் திருமணத்தில் மிகவும் நெருங்கிய 50 உறவினர்கள் மட்டுமே இருவரின் தரப்பிலும் கலந்து கொண்டனர்.

முதல் அழைப்பிதழ்

முதல் அழைப்பிதழ்

தங்களது முதல் திருமண அழைப்பிதழை அசின் - ராகுல் சர்மா இருவரும் தங்கள் காதல் மலரக் காரணமாக இருந்த நடிகர் அக்ஷய் குமாரிடம் வழங்கி இருந்தனர். அதே போல இவர்கள் இருவரின் திருமணத்திலும் அக்ஷய்குமார் முதல் ஆளாக வந்து பங்கேற்று சிறப்பித்தார்.திரையுலகைச் சேர்ந்த வேறு யாருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

திரை நட்சத்திரங்கள்

திரை நட்சத்திரங்கள்

வருகின்ற 23ம் தேதி அசின் - ராகுல் சர்மா திருமண வரவேற்பு மிகப் பிரமாண்டமாக மும்பையில் நடைபெறவிருக்கிறது. தமிழ், தெலுங்கு மொழிகளில் அசினுக்கு நிறைய நண்பர்கள் இருப்பதால் அனைவரும் கலந்து கொள்ளும்படி அழைப்பிதழ் அனுப்பியிருக்கிறார். மும்பையில் நடைபெறும் வரவேற்பில் கோலிவுட், டோலிவுட் மற்றும் பாலிவுட்டில் இருந்து ஏராளமான நட்சத்திரங்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Asin - Rahul Sharma Marriage was held at on Yesterday. Both the couple will Arrange a Grand Reception on Coming 23rd at Mumbai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil