»   »  பாலிவுட், கோலிவுட் நட்சத்திரங்கள் கலந்து கொண்ட அசின்-ராகுல் சர்மா திருமண வரவேற்பு!

பாலிவுட், கோலிவுட் நட்சத்திரங்கள் கலந்து கொண்ட அசின்-ராகுல் சர்மா திருமண வரவேற்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: நடிகை அசின் - ராகுல் சர்மா திருமண வரவேற்பு நேற்று மும்பையில் பிரமாண்டமாக நடைபெற்றது.இதில் பெரும்பாலான பாலிவுட் மற்றும் தென்னிந்திய நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.

அசின் - ராகுல் சர்மா திருமணம் கடந்த 19 ம் தேதி டெல்லியில் உள்ள பிரபல ஹோட்டலில் நடைபெற்றது. ராகுல் சர்மா இந்து, அசின் கிறிஸ்தவர் என்பதால் 2 முறையிலும் இவர்களது திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் நேற்று நடந்த திருமண வரவேற்பில் கோலிவுட், டோலிவுட், மல்லுவுட் மற்றும் பாலிவுட்டைச் சேர்ந்த ஏராளமான நட்சத்திரங்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

அசின் -ராகுல் சர்மா

அசின் -ராகுல் சர்மா

நடிகை அசின் - மைக்ரோமேக்ஸ் இணை நிறுவனர் ராகுல் சர்மா காதல் திருமணம் ஜனவரி 19 ம் தேதி டெல்லியில் உள்ள பிரபல ஹோட்டலில் எளிமையாக நடைபெற்றது. இந்து-கிறிஸ்தவ முறைப்படி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

வரவேற்பு

திருமணத்தை எளிமையாக நடத்திய ராகுல் சர்மா-அசின் தம்பதி நேற்று மும்பையில் பிரமாண்டமாக தங்களது திருமண வரவேற்பை நடத்தினர்.இந்த வரவேற்பில் தென்னிந்திய மற்றும் பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.இந்த வரவேற்பில் அசின் அழகான ஒரு லெஹங்காவை அணிந்து ஜொலிக்க ராகுல் சர்மா கருப்பு கலர் ஷெர்வானி அணிந்து கம்பீரமாக காட்சியளித்தார்.

பாலிவுட்

பாலிவுட்டைப் பொறுத்தவரை அக்ஷய்குமார், ஜாக்குலின் பெர்னாண்டஸ்,மாதவன், ஷில்பா ஷெட்டி, சாஜித் கான்,ஜுஹி சாவ்லா, ரிஷி கபூர், ப்ரீத்தி ஜிந்தா, ரித்தேஷ் தேஷ்முக், ஜெனிலியா மற்றும் தபு ஆகியோர் கலந்து கொண்டனர்.

கோலிவுட்

கோலிவுட்டில் இருந்து நடிகை குஷ்பூ, நடிகர் ஜெயம் ரவி ஆகியோர் இந்த விழாவில் கலந்து கொண்டனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விஜய், சூர்யா, விக்ரம் ஆகியோர் இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை.

டோலிவுட்

பாகுபலி புகழ் ராணா டகுபதி, வெங்கடேஷ் ஆகியோர் டோலிவுட்டில் இருந்து இந்த திருமண வரவேற்பில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.அசின் வெங்கடேஷுடன் இணைந்து கர்சேனா(காக்க காக்க) படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.

மல்லுவுட்

அசினின் தாயகமான மலையாள சினிமாவில் இருந்து நடிகர் நிவின் பாலி, ரசூல் பூக்குட்டி, குஞ்சாக்கோ போபன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அனைவருடனும் செல்பி

கலந்து கொண்ட அனைத்து நட்சத்திரங்களுடனும் ராகுல்-அசின் ஜோடி செல்பி எடுத்துக் கொண்டனர். வந்திருந்த அனைவரும் வாழ்த்திச் செல்ல இனிதே முடிந்தது அசினின் திருமண வரவேற்பு.

English summary
Asin-Rahul Sharma Grand Wedding Reception was Held at Mumbai on Saturday. Many Celebrities from Bollywood and the South Indian film Industry Attended the event.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil