»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

புவனேஸ்வர்:

முன்னணி இந்தி நடிகர் ஷாரூக் கான் நடிக்க அசோக சக்கரவர்த்தி குறித்துதயாரிக்கப்பட்டு வரும் அசோகா தி கிரேட் என்ற இந்திப்படத்தின் படப்பிடிப்புநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்தத் திரைப்படத்தின் இயக்குனர் சந்தோஷ்சிவன் சரித்திர நிகழ்வுகளை திரித்துக்கூறியிருப்பதாக சரித்திர வல்லுனர்கள், அரசியல்வாதிகள் மற்றும் திரைப்படத்துறையைச் சேர்ந்தவர்களும் குற்றம் கூறியதைத் தொடர்ந்து இந்தப் படத்தின்படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்தப்படத்தின் இயக்குனர் சந்தோஷ் சிவன் சமீபத்தில் டெரரிஸ்ட் என்ற பரபரப்பானதிரைப்படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாமன்னர் அசோகர் கி.மு. நான்காம் நூற்றாண்டில் இன்று பீகார் என்றழைக்கப்படும்இடத்தை ஆண்டு வந்தார். கலிங்கத்துடன் அவர் போர் தொடுத்தபின் போரின்விளைவுகளைக் கண்டு வருந்தி அமைதிப் பாதையை நாடினார்.

அதற்கு புத்த மதத்தைத் தேர்ந்தெடுத்து அதில் தன்னை இணைத்துக் கொண்டார். அவர்அரசராக இருந்த போதும் புத்த மதத் துறவியாகவே வாழ்ந்து வந்தார்.

தற்போது சிவன் எடுத்துவரும் திரைப்படத்தை எதிர்ப்பவர்கள் ஒரிசாவிலுள்ள எந்தசரித்திர வல்லுனருடனும் இது குறித்து ஆலோசிக்கப்படவில்லை. இந்த திரைப்படத்தின்கரு குறித்தும் தெரிவிக்கப்படவில்லை என்று கூறுகின்றனர்.

ஆனால் சிவன் தான் தொல்பொருள் ஆராய்ச்சிக் கழகத்தினரிடமிருந்து ஒப்புதல்பெற்றுளதாகவும், தான் இந்த திரைப்படத்சில் எந்த விதமான சரித்திர நிகழ்வுகளையும்திரித்துக் கூறவில்லை எனவும் கூறியிருக்கிறார்.

அசோகா தி கிரேட் என்னும் இந்தத் திரைப்படத்தில் புதுமுகம் கரீனா கபூர் என்பவர்கலிங்க நாட்டின் இளவரசி கருபாகியாக நடிக்கிறார்.

சரித்திர வல்லுனரும் உட்கால் பல்கலைகழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றபேராசியருமான கருணா சாகர் பேக்ரா என்பவர் இந்தப் படத்தின் கதைஅனைவருக்கும் தெரிவிக்கப்பட வேண்டும். அப்போதுதான் இந்தக் கதையில் சரித்திரநிகழ்வுகள் சரியான விதத்தில் கையாளப்பட்டிருக்கிறதா என அறிய முடியும் எனகூறியிருக்கிறார்.

இந்த திரைப்படத்தில் அசோகர் கலிங்க இளவரசியின் மேல் காதல் கொண்டார்என்றும், ஆனால் இளவரசியோ கலிங்க மன்னனையே விரும்பினாள் என்றும்சித்தரிக்கப்பட்டுள்ளது. இளவரசியை மணம் செய்து கொள்ள விரும்பிய அசோகர்கலிங்கத்தின் மேல் படையெடுத்தார் என்றும் கதையில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் சரித்திரச் சான்றுகள் படி கருபாய் கலிங்க நாட்டு இளவரசி அல்ல. அவ்வாறுஇருந்தாலும் கலிங்க அரசர், இளவரசியின் தந்தையாகத்தானே இருக்க முடியும்.

வரலாற்றில் கருபாய் புத்த மதத்தைச் சார்ந்த பெண்மணி என்றும் அவர் அசோகருக்குபுத்தமதம் சம்பந்தப்பட்ட பணிகள் குறித்து வழிமுறைகளை தெரிவித்து வந்தார்என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. இந்த ஒரு காரணத்தினால்தான் அவர் பெயர்அசோகர் கால கல்வெட்டுகளில் இடம் பெற்றுள்ளது.

அசோகரின் கதையும், கலிங்கப் போர் பற்றிய விவரமும் உலக மக்கள் அனைவருக்கும்தெரிந்த ஒன்று அதில் ஏதாவது மாற்றங்கள் செய்யப்பட்டால் அது மக்களின் மிகப்பெரிய எதிர்ப்புக்கு இலக்காகும் என ஒரிசா வளர்ச்சிக் கழகத்தைச் சேர்ந்த சசுந்தா தாஸ்என்பவர் கூறியிருக்கிறார்.

ஐ.ஏ.என்.எஸ்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil