»   »  ரஜினி படத்தைத் தயாரிக்கிறேனா? - ஆஸ்கர் ரவிச்சந்திரன் விளக்கம்

ரஜினி படத்தைத் தயாரிக்கிறேனா? - ஆஸ்கர் ரவிச்சந்திரன் விளக்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சூப்பர் ஸ்டார் ரஜினியைச் சந்தித்தது உண்மைதான். ஆனால் அவர் நடிக்கும் புதுப் படத்தை நான் தயாரிக்கவில்லை என்று தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் விளக்கம் தெரிவித்துள்ளார்.

லிங்காவுக்குப் பிறகு ரஜினி நடிக்கும் புதுப் படம் குறித்து ஏகப்பட்ட செய்திகள், வதந்திகள், யூகங்கள் வெளியாகி வருகின்றன.

ஏ ஆர் முருகதாஸ்

ஏ ஆர் முருகதாஸ்

சமீபத்தில் அப்படி வெளியான ஒரு செய்தி.. ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படத்தை தயாரிக்கிறார் ஆஸ்கர் ரவிச்சந்திரன் என்பது.

ஊரெங்கும் பேச்சு

ஊரெங்கும் பேச்சு

இந்த செய்தி வெளியானதிலிருந்து ரஜினி ரசிகர்கள் அந்தப் படம் குறித்து பரவலாகப் பேச ஆரம்பித்தனர். இந்தப் படம் லிங்காவை வைத்து பிரச்சினை கிளப்பியவர்களுக்கு பெரும் பதிலடியாக அமைய வேண்டும் என்று கூறி வந்தனர்.

ஆஸ்கர் விளக்கம்

ஆஸ்கர் விளக்கம்

இந்த நிலையில், இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார் ஆஸ்கர் ரவிச்சந்திரன். அதில் இப்படி வெளியாகும் செய்திகளில் உண்மை இல்லை என்று கூறியுள்ளார்.

சந்தித்தது உண்மைதான்

சந்தித்தது உண்மைதான்

ரஜினி நான் சந்தித்தது உண்மைதான். ஆனால் அது படம் தயாரிப்பது குறித்து பேச அல்ல. அவருக்கு நன்றி தெரிவிக்கவே. தெலுங்கில் ஐ படம் வெளியாக அவர் பெரும் உதவி செய்தார். மற்றபடி அவர் படத்தைத் தயாரிப்பது குறித்து எதுவும் பேசவில்லை என்று கூறியுள்ளார்.

English summary
Aascar Ravichandiran has gave an explanation on his proposal to produce Rajini movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil