For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  தேசிய விருது கிடைக்கவில்லை என்ற வருத்தமில்லை... மக்களின் அங்கீகாரமே போதும் - தனுஷ்

  |

  சென்னை: வடசென்னை பார்ட் 2 நிச்சயம் உண்டு. அசுரன் படத்திற்குப் பிறகு மீண்டும் கூட்டணி சேர்ந்து வடசென்னை 2 செய்வோம் என்று தனுஷ் கூறியுள்ளார். அசுரன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய தனுஷ் இதனை தெரிவித்துள்ளார். தேசிய விருது கிடைக்கவில்லை என்று வருத்தப்படவில்லை எப்போதுமே விருதுக்காக படம் எடுத்ததில்லை என்றும் தனுஷ் கூறியுள்ளார்.

  பொல்லாதவன் படத்தில் முதன் முறையாக இணைந்த வெற்றிமாறன் - தனுஷ் வெற்றிக்கூட்டணி அசுரன் படத்தின் மூலம் நான்காவது முறையாக கூட்டணி சேர்ந்துள்ளனர்.கலைப்புலி.எஸ். தாணுவின் வி கிரியேஷன்ஸ் சார்பில் உருவாகியுள்ள படம் அசுரன். இப்படத்தில் 50 வயது அப்பா, 22 வயது இளைஞராக நடித்திருக்கிறார் தனுஷ். இப்படத்தின் படப்பிடிப்பு வடசென்னை படம் வெளியான ஒரு வாரத்திலேயே தொடங்கப்பட்டுவிட்டது. அதனை அடுத்து விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது முடிவடைந்து ரிலீஸுக்கு தயராக இருக்கிறது.

  பூமணி எழுத்தில் வெளியான வெக்கை நாவலை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. மஞ்சு வாரியர்தான் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார். தமிழில் இந்த படம்தான் மஞ்சு வாரியருக்கு முதல் படம். அக்டோபர் 4ஆம் தேதி இப்படம் ரிலீஸாகிறது என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

  அசுரன் பாடல் வெளியீட்டு விழா

  அசுரன் பாடல் வெளியீட்டு விழா

  இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. கத்திரி பூவழகி என்றொரு பாடல் இன்று வெளியாக இருப்பதாக நேற்று படக்குழு அறிவித்திருந்தது. தற்போது இப்படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் மேலும் பொல்லாத பூமி என்றொரு பாடலும் வெளியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

  வெற்றிமாறன்

  வெற்றிமாறன்

  இதனிடையே பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய வெற்றி மாறன், போன அக்டோபர் 17 வடசென்னை இந்த அக்டோபர் 4 அசுரன் ரிலீஸ் செய்கிறேன். தயாரிப்பாளர்தான் இதற்கு முக்கிய காரணம். அதுவாகவே தன்னை உருவாக்கிக்கொள்ளும். என்னோட டெக்னிக்கல் டீம் அப்படியே அமைஞ்சிருக்கு. ஜாக்சன், வேல்ராஜ் எல்லோருமே எனக்காக வேலை செய்திருக்கிறார்கள். நாம யோசிக்க நினைத்ததை அவர்களே யோசித்து ரெடி செய்து வைத்திருப்பார்கள். என்னோட எடிட்டர் சரியாக அமைந்திருக்கிறார். காலை 7 மணி தொடங்கி விடிய விடியவரைக்கூட போகும். ராமர் சரியாக செய்து கொடுத்திருக்கிறார். ஸ்டண்ட் பீட்டர் கெய்ன் செய்திருக்கிறார்.

  எல்லோரும் முக்கியம்

  எல்லோரும் முக்கியம்

  பசுபதியும் நானும் பல படங்களில் வேலை செய்ய நினைத்தோம் அதுமுடியலை இந்த படத்தில்தான் அது முடிஞ்சிருக்கு. கென் தான் முதலில் பிக்ஸ் பண்ணேன். இன்ஸ்பெக்டராக பாலாஜி சக்திவேல் நடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்து பேசினேன். முதலில் முடியாது என்றார். அப்புறம் அழகாக நடித்து கொடுத்தார். மிகப்பெரிய நடிகராகிவிடுவார். நரேன் தொடர்ந்து கூடவே நடித்துக்கொண்டிருக்கிறார். நல்ல ஸ்டராங்கான ரோல். நடிக்க வரும் எல்லோரும் நரேனிடம் பயிற்சிக்காக போவார்கள். பவன் என்னோட நண்பர். அவரை நடிக்க வைத்திருக்கிறேன். இந்த படத்தில் ஒவ்வொரு கேரக்டர்ஸ்சும் முக்கியம்தான் என்றார்.

  தனுஷ் பேச்சு

  தனுஷ் பேச்சு

  வெற்றிமாறன் நான் பேசவே முடியாத அளவிற்கு என்னை பேச வைக்க முடியாமல் அவரே பேசி விட்டார். சிவசாமி கதாபாத்திரம் இந்த வயதில் கிடைத்தது ரொம்ப பெரிய விசயம். பொல்லாதவன் படத்தில் இருந்து சேலஞ்சிங்கான இன்ட்ரஸ்ட்டிங்கான கதாபாத்திரங்களை கொடுக்கிறார்.
  நாங்க கண்டினியூசா டிராவல் பண்ணப்போறோம் என்பதால் யாருக்கும் நன்றி சொல்லப்போறதில்லை. இப்ப நடிக்க வர்றவங்க ரொம்ப யோசிச்சு நடிக்கிறாங்க. ரொம்ப டேலண்டா இருக்காங்க.

  வருத்தமில்லை

  வருத்தமில்லை

  வட சென்னை படத்துக்கு தேசிய விருது கிடைக்காததற்காக தான் வருத்தப்படவில்லை அதே நேரம் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ்க்கு தேசிய விருது கிடைக்காததற்காக நான் வருத்தப்பட்டேன். மேற்குத் தொடர்ச்சி மலை, ராட்சசன், பேரன்பு உள்ளிட்ட படங்களுக்கு தேசிய விருது கிடைக்காதது வருத்தம் தான். நாங்கள், 2010ஆம் ஆண்டிலேயே தேசிய விருது வென்றுவிட்டோம். எங்களுக்கு பேராசையில்லை. வெற்றிமாறன் தேசிய விருது குறித்து எங்கேயும் பேச வேண்டாம் என்று சொன்னார். ஆனால் என் மனதில் இருப்பதை வெளிப்படையாக சொல்கிறேன். விருது வாங்கிய போது குதிச்சதுமில்ல. விருது கிடைக்கலயே அப்படின்னு துடிச்சதுமில்ல. விருதுக்காக நாங்கள் படமெடுப்பதுமில்லை. மக்களுக்கு படம் பிடித்திருக்கிறது. அந்த கவுரம் எங்களுக்கு கிடைத்துவிட்டது. அதுபோதும் என்று கூறினார்.

  வடசென்னை 2

  வடசென்னை 2

  ஜி.வி. பிரகாஷ் கூட எட்டு வருஷம் கழிச்சு மீண்டும் வேலை செய்கிறோம். ரொம்ப சந்தோஷம், குஷியா இருக்கு. அவர் கிட்ட பாட்டு பாடுறது ரொம்ப ஈஸி. மண்ணை சார்ந்த பாடல் கொடுத்திருக்கிறார். இதுதான் வெற்றிமாறனின் பெஸ்ட் படமாக இருக்கப் போகிறது. படம் ஆரம்பிக்கிறது முன்னாடியே என்னோட முழு சம்பளத்தையும் கொடுத்தவர் தானு சார் என்றார் தனுஷ். வடசென்னைக்கு பிறகு வடசென்னை 2 தான் எதிர்பார்த்தேன். ஆனால் அசுரன் கிடைத்தது மிகப்பெரிய பாக்கியம். இது முடிந்த பின்னர் வடசென்னை பாகம் 2 செய்வோம் என்றார் தனுஷ்.

  கலைப்புலி எஸ். தாணு

  கலைப்புலி எஸ். தாணு

  தயாரிப்பாளர் கலைப்புலி தாணு பேசும் போது மஞ்சுவாரியார் கால்சீட் கிடைக்க பல படங்களுக்கு முயற்சி செய்தேன். அது அசுரன் மூலம் சாத்தியமாகியிருக்கிறது என்றார். இந்த படத்தின் பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் போகும் ஆடியோ ரைட்ஸ் மூலம் கிடைக்கும் வருமானம் தயாரிப்பாளர்களுக்கு கொடுக்கப்படும் என்று பட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தெரிவித்துள்ளார்.

  English summary
  Asuran Audio Launch Vetrimaran and Dhanush speech
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X