Don't Miss!
- Automobiles
ஹை ஸ்பீடில் ஓவர்டேக் செய்யக்கூடாதுனு சொல்றது இதுக்குதான்!! கண் இமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்த விபத்து...
- Lifestyle
செக்ஸ் ஆண்களுக்கும், பெண்களுக்கும் எவ்வளவு கலோரிகளை எரிக்கிறது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க...!
- News
நோ அரசியல்! இறங்கி வேலை செய்யுங்கள்! கலெக்டர்களுக்கு ''ஃபுல் ஃப்ரீடம்'' வழங்கிய முதலமைச்சர்!
- Finance
Adani Group: ரூ.9 லட்சம் கோடி இழப்பு.. RBI சொல்வது என்ன..?! முதலீட்டாளர்களே கவனிங்க..!
- Sports
இந்தியாவுக்கு உள்ள ஒரே ஒரு சிக்கல்.. ஸ்டீவ் ஸ்மித்தை எப்படி வீழ்த்துவது.. இர்ஃபான் பதான் பலே யோசனை!
- Technology
Jio, Airte, Vi வழங்கும் மலிவு விலை திட்டங்கள்: அதிக நன்மைகள் வழங்கும் நிறுவனம் எது?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
அதே கடைதான்.. டெய்லரும், சட்டையோட அளவும்தான் வேற வேற.. நரப்பா டிரைலரை நக்கலடிக்கும் நெட்டிசன்ஸ்!
சென்னை: நடிகர் வெங்கடேஷ் நடிப்பில் அசுரன் படத்தின் அதிகாரப்பூர்வமான தெலுங்கு ரீமேக் படமாக உருவாகி உள்ள நரப்பா படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் நரப்பா திரைப்படம் வரும் ஜூலை 20ம் தேதி ரிலீசாகிறது.
அனைவரும் தடுப்பூசி கட்டாயமாக செலுத்தணும்...சூரி அட்வைஸ்
நரப்பாவின் டிரைலரை பார்த்த கோலிவுட் ரசிகர்கள் தனுஷின் அசுரன் படத்துடன் ஒப்பிட்டு கலாய்த்து வருகின்றனர்.
நரப்பா டிரைலர் ரிலீஸ்
கலைப்புலி தாணு மற்றும் சுரேஷ் பாபு இணைந்து தயாரித்துள்ள நரப்பா திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. இயக்குநர் ஸ்ரீகாந்த் அடாலா இந்த படத்தை இயக்கி உள்ளார். இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் தமிழில் வெளியான தனுஷின் அசுரன் படத்தின் ரீமேக் தான் இந்த படம். டிரைலரை பார்த்தால் அப்படியே அசுரன் படம் போலவே தான் இருக்கிறது.

டிரெண்டிங்கில் அசுரன்
நரப்பா டிரைலர் வெளியான அடுத்த நொடியே #Asuran ஹாஷ்டேக்கை ட்விட்டரில் தெறிக்கவிட்டு டிரெண்ட் செய்து வருகின்றனர் தனுஷ் ரசிகர்கள். அசுரன் படத்தை மேட்ச் செய்வது ரொம்பவே கஷ்டம் என்றும் தனுஷின் அசுரன் கிட்ட கூட இந்த படம் வராது என கிண்டல் செய்து வருகின்றனர்.

தனுஷ் வளர்ச்சி
யாரடி நீ மோகினி படத்தின் ஒரிஜினலில் நடிகர் வெங்கடேஷ் நடித்திருந்தார். அந்த படத்தின் ரீமேக்கில் தனுஷ் நடித்திருந்தார். தற்போது தனுஷின் அசுரன் படத்தை ரீமேக் செய்து வெங்கடேஷ் நடித்திருக்கிறார். தனுஷ் அண்ணாவின் வளர்ச்சி வேற லெவல் என பாராட்டி வருகின்றனர்.

வெட்டி ஒட்டிருக்காங்க
அப்படியே அசுரன் படத்தின் காட்சிகளில் வெங்கடேஷ் நடித்தது போலவே இருக்கு. தனுஷின் யங் வெர்ஷன் ஆக்கிரோஷத்தில் பாதி அளவு கூட வெங்கடேஷின் நரப்பா படத்தில் இல்லை என்று டோலிவுட் ரசிகர்களே கிண்டல் செய்து வருகின்றனர்.

தனுஷ் தான்
அசுரன் படத்திற்கு ஆப்டான நடிகர் தனுஷ் தான். நடிகர் வெங்கடேஷ் நல்ல நடிகராக இருந்தாலும் அசுரன் தனுஷை அவரால் நிச்சயம் மேட்ச் பண்ணவே முடியவில்லை என தனுஷ் ரசிகர்கள் டிரெண்டிங்கை திணறடித்து வருகின்றனர்.

அதே கடைதான்
காஸ்ட்யூம் முதல் காட்சி வரை அப்படியே அசுரன் படத்தை பார்ப்பது போலவே இருக்கு என குறிப்பிட்டுள்ள நெட்டிசன்கள் அதே கடைதான் டெய்லரும், சட்டையோட அளவும் தான் வேற.. வேற என கிண்டல் அடித்து வருகின்றனர். அசுரன் படத்திற்கு ஈடு செய்யும் அளவுக்கே நரப்பா டிரைலர் உள்ளதாகவும் பிரபலங்கள் பாராட்டி வருகின்றனர்.