twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சிறு வயதில் பூனை போல் பதுங்கி பதுங்கி எட்டிப் பார்ப்பார் யுவன்... சுந்தர்.சி ஃபிளாஷ் பேக்

    |

    சென்னை: வின்னர் படத்தை தொடர்ந்து சுந்தர்.சி இயக்கும் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா தற்சமயம் இசையமைக்கிறார்.

    வின்னர் படத்தில் பாடல்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் ஆனது. இப்போது காஃபி வித் காதல் ஒரு ஜாலியான படமாக உருவாவதால் இந்தப் படத்தின் இசைக்கும் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது.

    யுவனை சிறுவயதில் இருக்கும்போதே தான் பார்த்ததாக சுந்தர்.சி சில சுவாரஸ்ய நிகழ்வுகளை கூறியுள்ளார்.

    சுந்தர் சி இயக்கியுள்ள காஃபி வித் காதல் படத்தை வெளியிடும் ரெட் ஜெயன்ட்ஸ்: ரிலீஸ் தேதியுடன் அப்டேட் சுந்தர் சி இயக்கியுள்ள காஃபி வித் காதல் படத்தை வெளியிடும் ரெட் ஜெயன்ட்ஸ்: ரிலீஸ் தேதியுடன் அப்டேட்

     வின்னர் டூ காஃபி வித் காதல்

    வின்னர் டூ காஃபி வித் காதல்

    காஃபி வித் காதல் திரைப்படத்தை அன்பே வா ஸ்டைலில் ஊட்டியில் படமாக்கி இருக்கிறார் சுந்தர்.சி. இந்தப் படத்திற்கு 2000-களில் இசையமைத்த விண்டேஜ் யுவன் சங்கர் ராஜா இசையின் சாயலில் பாடல்கள் வேண்டும் என்று கேட்டு வாங்கி உள்ளாராம். ஏற்கனவே மைக்கேல் மதன காமராஜன் திரைப்படத்திலிருந்து பேர் வச்சாலும் பாடலை ரீமிக்ஸ் செய்த யுவன் அதில் பெரும் வெற்றியை கண்டார். இந்தப் படத்திற்காகவும் அதே படத்திலிருந்து ரம் பம் பம் பாடலை ரீமிக்ஸ் செய்துள்ளார்.

     ஸ்க்ரீன் பிரசென்ஸ்

    ஸ்க்ரீன் பிரசென்ஸ்

    யுவனிடம் ஒரு விஷயம் கேட்டால் நோ என்ற வார்த்தையே வராதாம். எதுவாக இருந்தாலும் கண்டிப்பாக செய்யலாம் என்று கூறுவாராம். மிகவும் கலகலப்பாகவே இருப்பார் அதனால் இந்தப் படத்தில் ஒரு பாடலில் அவரை நடிக்க வைக்கலாம் என்று முடிவு செய்து படப்பிடிப்பு நடந்த ஊட்டிக்கு அவரை வரச் சொன்னேன். அவரும் உடனே வருகிறேன் என்று கூறிவிட்டார். எங்கே வரப் போகிறார் என்று நினைத்துக் கொண்டிருந்தபோது சரியான தேதியில் வந்து நடித்துக் கொடுத்தார். கேமரா முன்பு நடிகர்களுக்கு இருக்கும் டைமிங் சென்சுடன் அவரும் ஒரே டேக்கில் ஷாட்டுகளை ஓகே செய்ததாக சுந்தர்.சி கூறியுள்ளார்.

     கார்த்திக் ராஜா

    கார்த்திக் ராஜா

    இளையராஜா அவர்களுடன் பணி புரியும் வாய்ப்பு எனக்கு அமையவில்லை. ஆனால் கார்த்திக் ராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜாவுடன் பணிபுரிந்துவிட்டேன். ஆரம்பத்தில் கார்த்திக் ராஜாவுடன் பணிபுரியும்போது இளையராஜா வீட்டில் இருக்கும் கார்த்திக் ராஜா அறையில்தான் கம்போசிங் செய்வோம். கம்போசிங் செய்து கொண்டே அந்த அறையின் வாசலை திரும்பி திரும்பி பார்ப்பார் கார்த்திக். ஏன் அடிக்கடி அப்படி பார்க்கிறீர்கள் என்று கேட்டால் தம்பி யுவன் உள்ளே வந்து எனக்கு தெரியாமல் ஏதேனும் இசை டிஸ்க்குகளை எடுத்துக் கொண்டு சென்று விடுவான். அதனால்தான் பார்க்கிறேன் என்று கூறுவாராம். அவர் சொல்வது போலவே யுவன் சங்கர் ராஜா பதுங்கிப் பதுங்கி பூனை போல் உள்ளே வந்து ஏதாவது ஒரு பொருளை எடுத்துச் செல்வாராம்.

     சுந்தர்.சி ஆச்சர்யம்

    சுந்தர்.சி ஆச்சர்யம்

    அப்படி யுவன் சங்கர் ராஜா சிறுவயதில் விளையாட்டுத்தனமாக இருந்தபோது இவ்வளவு பெரிய இசையமைப்பாளர் ஆவார் என்று நினைத்துக் கூட பார்த்ததில்லை. இசையில் அவருடைய முதிர்ச்சி என்னை ஆச்சரியப்படுத்தியுள்ளது. அவரை நான் மெலடி கிங் என்று கூறுவேன். அந்த வித்தை அவரது விரல்களில் இருக்கிறதா என்று கூட ஆச்சரியப்பட்டுள்ளேன். மெலடி பாடல்களை உடனே கம்போஸ் செய்வார். எனக்கு அவர் காலதாமதமாக பாடல்களை கொடுத்ததில்லை என்று சுந்தர்.சி கூறியுள்ளார்

    English summary
    After Winner Movie, Yuvan Shankar Raja is currently composing the music for Sundar C's film. All the songs in Winner film became super hits.. Now that Koffee with Kadhal is shaping up to be a fun film, expectations are building for the music of this film as well. Sundar.C has told some interesting incidents that he saw Yuvan when he was still a child.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X