அண்ணாத்த படம்... முதல் நாள்.. முதல் காட்சி... எத்தனை மணிக்கு ஆரம்பிக்குது தெரியுமா?

சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் அண்ணாத்த படத்தின் முதல் நாள் முதல் காட்சி திரையிடப்படும் நேரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் அண்ணாத்த. இந்தப்படத்தில் குஷ்பு, மீனா, நயன்தாரா கீர்த்தி சுரேஷ், கஜபதி பாபு, பிரகாஷ் ராஜ், வேல ராமமூர்த்தி, சூரி, சதீஷ், சத்தியன் என பலர் நடிக்கின்றனர்.

இந்தப் படத்திற்கு இமான் இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் அண்ணாத்த படத்தை தயாரிக்கிறது. இந்நிலையில் அண்ணாத்த திரைப்படம் நாளை ரிலீஸ் ஆகிறது.

நாளை ரிலீஸ்

நாளை ரிலீஸ்

ரசிகர்கள் மத்தியில் இப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் மட்டும் 650 தியேட்டர்களில் அண்ணாத்த படம் ரிலீஸ் ஆகிறது. இப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவு கடந்த வாரமே தொடங்கி விட்டது. இந்நிலையில் அண்ணாத்த படத்தின் முதல் நாள் முதல் காட்சி திரையிடப்படும் நேரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

காலை 4 மணிக்கு

காலை 4 மணிக்கு

அதன்படி புதுக்கோட்டை, தூத்துக்குடி மற்றும் சென்னை போன்ற பகுதிகளில் நவம்பர் 4 ஆம் தேதி அன்று அதிகாலை 4 மணிக்கே அண்ணாத்த படம் திரையிடப்படுகிறது. படம் அதிகாரப்பூர்வ விடுமுறை நாளில் வெளியாகிறது என்பதால். அதிகாலை காட்சிகளுக்கு சிறப்பு அனுமதிகள் தேவையில்லை.

100 சதவீத பார்வையாளர்கள்

100 சதவீத பார்வையாளர்கள்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இதுவரை 50 சதவீத பார்வையாளர்களுடன்தான் திரையரங்குகள் செயல்பட்டு வந்தது. அண்மையில்தான் கொரோனா தளர்வுகளாக திரையரங்குகள் 100 சதவீத பார்வையாளர்களுடன் செயல்பட அனுமதி வழங்கப்பட்டது.

வெளிநாடுகளில் ரிலீஸ்

வெளிநாடுகளில் ரிலீஸ்

இந்நிலையில் அண்ணாத்த படத்தின் முதல் நாள் முதல் காட்சி மட்டுமின்றி முதல் வாரம் முழுவதுமே பெரும்பாலான தியேட்டர்களில் டிக்கெட் முன்பதிவு முடிந்துவிட்டது. இதனிடையே அண்ணாத்த படம் வெளிநாடுகளில் ரிலீஸ் ஆவது குறித்த தகவலும் வெளியாகியுள்ளது.

எந்தெந்த தியேட்டர்கள்

எந்தெந்த தியேட்டர்கள்

அதன்படி அண்ணாத்த படத்தை வெளிநாடுகளில் 1119 திரையரங்குகளில் வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அதிகபட்சமாக அமெரிக்காவில் 572 திரையரங்குகளில் இப்படம் வெளியாக உள்ளது. ஐக்கிய அரபு நாடுகளில் 83, மலேசியாவில் 110, இலங்கையில் 60, ஆஸ்திரேலியா 70, நியூசிலாந்தில் 14 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது.

அதிக திரையரங்குகளில்..

அதிக திரையரங்குகளில்..

மேலும் ஐரோப்பிய நாடுகளில் 135, இங்கிலாந்தில் 35, சிங்கப்பூரில் 23, கனடாவில் 17 என மொத்தமாக 1119 தியேட்டர்களில் வெளியாக உள்ளது. இதன்மூலம் வெளிநாடுகளில் அதிக திரையரங்குகளில் வெளியாகும் முதல் தமிழ் படம் என்கிற பெருமையை 'அண்ணாத்த' திரைப்படம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X