»   »  ஒத்தைக்கு ஒத்த ஆட ப்ரியா ஆனந்தை பரிந்துரைத்த அதர்வா?

ஒத்தைக்கு ஒத்த ஆட ப்ரியா ஆனந்தை பரிந்துரைத்த அதர்வா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒத்தைக்கு ஒத்த படத்தில் ப்ரியா ஆனந்தை நடிக்க வைக்குமாறு அதர்வா பரிந்துரை செய்துள்ளாராம்.

அதர்வா செம போதை ஆகாதே, ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும், இமைக்கா நொடிகள் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இமைக்கா நொடிகள் படத்தில் நயன்தாராவும் உள்ளார்.

Atharva recommends Priya Anand?

இந்நிலையில் அதர்வா புதுமுக இயக்குனர் பர்னேஷின் ஒத்தைக்கு ஒத்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தில் இரண்டு ஹீரோயின்கள். சைவம் படத்தில் நடித்த வித்யா பிரதீப்பை ஒரு ஹீரோயினாக ஒப்பந்தம் செய்தாகிவிட்டது.

அடுத்த ஹீரோயினாக யாரை நடிக்க வைக்கலாம் என இயக்குனர் யோசனையில் இருந்துள்ளார். அப்போது அதர்வாவோ, ப்ரியா ஆனந்தை இரண்டாவது நாயகியாக ஆக்குமாறு பரிந்துரை செய்தாராம்.

Atharva recommends Priya Anand?

அதர்வாவுக்கும், ப்ரியா ஆனந்துக்கும் இடையே காதல் என்று கிசுகிசுக்கப்பட்ட நிலையில் அவர் ப்ரியாவை பரிந்துரை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Atharva has reportedly recommended rumoured girl friend Priya Anand in his upcoming movie Othaiku Otha to be directed by debutant Barnesh.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil