»   »  மூச்சு விடவே கஷ்டப்படும் அதர்வா.. வைரலாகும் மேக்கப் படங்கள்!

மூச்சு விடவே கஷ்டப்படும் அதர்வா.. வைரலாகும் மேக்கப் படங்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : சினிமாவில் நடிக்க வந்துவிட்டால் மேக்கப் என்பது இன்றியமையாதது. கலைஞர்களின் பாதை சாதாரணமானதாக அமையாது. பல பிரச்சனைகளை, தோல்விகளைச் சந்தித்துத்தான் இப்போது புகழ்பெற்றிருருக்கும் நடிகர்கள் வந்திருக்கிறார்கள்.

நடிகர் கமல்ஹாசனின் படங்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு விஷயங்களை கூறும் படமாக இருக்கும். ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான வேடம் போடுவது, அழுத்தமான கருத்தைக் கூறுவது என நிறைய விஷயங்கள் இருப்பதால்தான் அவரை உலகநாயகன் என்கிறோம்.

Atharvaa makeup photos goes viral

ஒரு படத்துக்காக வித்தியாசமான வேடம் போட இருக்கிறார் இளம் நடிகர் அதர்வா. 'பூமராங்' படத்திற்காக அதர்வா மூன்று வித்தியாசமான வேடத்தில் தோன்ற இருக்கிறாராம். அதற்கான மாதிரி வடிவமைப்புகளின் வேலைகளில் படக்குழுவினர் பிஸியாக உள்ளனர்.

இந்த மேக்கப்பிற்காக அதர்வா 5 மணிநேரம் அப்படியே உட்கார வேண்டுமாம். மும்பையில் இருந்து வந்துள்ள மேக்கப் கலைஞர்கள் தொடர்ந்து 12 மணிநேரம் இந்த கெட்டப்பிற்காக வேலை செய்து வருகிறார்கள்.

Atharvaa makeup photos goes viral

மேக்கப் வடிவமைப்பின் போது அதர்வா மூச்சு விடுவதற்கு மிகவும் கஷ்டப்பட்டார் என இப்பட இயக்குனர் கண்ணன் கூறியுள்ளார். அதர்வாவுக்கு மேக்கப் கலைஞர்கள் மேக்கப் போடும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

கண்ணன் இயக்கும் 'பூமராங்' படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். சுஹாசினி, சதீஷ், ஆர்.ஜே.பாலாஜி ஆகியோரும் இப்படத்தில் நடிக்கிறார்கள்.

English summary
Atharvaa will be acted in three different roles for 'Boomerang'. Makeup artists from Mumbai have been working 12 hours for this makeup.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X