»   »  சண்டிவீரனுக்கு ஜோடியான பாலிவுட் நாயகி

சண்டிவீரனுக்கு ஜோடியான பாலிவுட் நாயகி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் அதர்வாவுக்கு ஜோடியாகியுள்ளார் பாலிவுட் நாயகி ஒருவர்.

நடிகர் அதர்வாவின் நடிப்பில் கடந்த வாரம் வெளியாகிய சண்டிவீரன் வசூலில் சத்தமில்லாமல் சாதித்துக் கொண்டிருக்கின்றது, முதல் முறையாக வெற்றிக்கனியை சுவைத்த உற்சாகத்தில் திளைக்கிறார் அதர்வா.

மேலும் அதர்வா நடித்து வந்த கணிதன், ஈட்டி ஆகிய படங்களின் படப்பிடிப்பு முடிந்து, தற்போது இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில், இப்படங்களை வெளியிடவுள்ளனர்.

ருக்குமணி வண்டி வருது

ருக்குமணி வண்டி வருது

இதனைத் தொடர்ந்து மேலும் ஒரு புதிய படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார் அதர்வா முரளி, வானவராயன் வல்லவராயன் படத்தை இயக்கிய ராஜ்மோகன் இயக்கத்தில் தற்போது ருக்குமணி வண்டி வருது என்ற படத்தில் நடிக்க இருக்கிறார் அதர்வா.

படம் முழுக்க ஜீப்

படம் முழுக்க ஜீப்

படம் முழுவதும் ஜீப் ஒன்று முக்கியமான வேடத்தில் வருகிறது முழுக் கதையும் அந்த ஜீப்பைச் சுற்றி

நகருவதால், படத்திற்கு இந்த மாதிரி ஒரு தலைப்பை வைத்திருப்பதாக இயக்குநர் ராஜ்மோகன் கூறியுள்ளார்.

பூஜா ஜாவேரி

பூஜா ஜாவேரி

இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிக்க பூஜா ஜாவேரி என்ற பாலிவுட் நாயகி ஒப்பந்தமாகியுள்ளார். இவர், தற்போது பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் புதிய படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

தனுஷ் நாயகி

தனுஷ் நாயகி

தனுஷ் படத்தைத் தொடர்ந்து அதர்வா படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் பூஜா ஜாவேரி இந்தியில் அறிமுகமாகி, தெலுங்கில் கால் பதித்து தற்போது தமிழுக்கு வந்திருக்கிறார்.

முன்னுக்கு வருவாரா

முன்னுக்கு வருவாரா

பூஜா ஜாவேரி தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகையாக மாறுவாரா என்று இப்போதே தமிழ்த் திரையுலகில் இப்போதே கருத்துக் கணிப்புகள் தொடங்கியிருக்கின்றன. முன்னணி நடிகையாக மாறுவாரா என்பதை அவரது படங்கள் தான் தீர்மானிக்கும் எனினும் நாம் வழக்கம் போல செய்வது போல பொறுத்திருந்தே பார்க்கலாம், அவசரம் ஒண்ணுமில்ல...

English summary
Atharvaa Murali Will Team up with Director Rajmohan for his Next Film, the Female lead role Confirmed Bollywood Heroine Pooja Jhaveri.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil