திரையரங்கில் வெளியாகும் அதர்வாவின் குருதி ஆட்டம்... லேட்டஸ்ட் அப்டேட்!

சென்னை : பரதேசிக்கு பிறகு மீண்டும் அதர்வா இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படும் நிலையில் அந்தப் படத்தை நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்க உள்ளது.

தெலுங்கில் மிகப்பெரிய வெற்றி பெற்ற நின்னுக்கோரி தமிழில் தள்ளிப்போகாதே என்ற பெயரில் அதர்வாவின் நடிப்பில் உருவாகி உள்ளது. இந்த படத்தை இயக்குனர் ஆர் கண்ணன் இயக்கியுள்ளார் . கொடிக்குப் பிறகு தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கும் நடிகை அனுபமா பரமேஸ்வரன் இப்படத்தில் கதாநாயகியாக அதர்வாவுடன் ரொமான்ஸ் செய்கிறார்.

அரை டஜன் திரைப்படங்களுக்கு மேல் கைவசம் நடித்து வரும் அதர்வாவின் நடிப்பில் ரிலீசுக்கு தயாராகி உள்ள குருதி ஆட்டம் சென்ற ஆண்டே வெளியாக இருந்தது கொரோனா பிரச்சினை காரணமாக தள்ளி வைக்கப்பட்ட நிலையில் ரிலீஸ் பற்றிய புதிய அப்டேட் இப்பொழுது வெளியாகியுள்ளது.

ஆக்சன் ஹீரோவாக

ஆக்சன் ஹீரோவாக

மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்துடன் இளம் நடிகராக ஜொலித்துக் கொண்டிருக்கும் அதர்வா தொடர்ந்து காதல் படங்களில் நடித்து லவ்வர் பாயாக வலம் வந்ததை அடுத்து இப்பொழுது ஆக்சன் கதைகளை தேர்ந்தெடுத்து ஆக்சன் ஹீரோவாக மாறி வருகிறார். அந்த வகையில் இயக்குனர் சாம் ஆன்டன் உடன் இணைந்து நடித்த 100 திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து ஆக்ஷன் ஹீரோ அந்தஸ்தை பெற்று வரும் அதர்வா மீண்டும் சாம் ஆன்டன் உடன் இணைந்து இரண்டாவது முறையாக ஆக்ஷன் கதைக் காலத்தில் புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் மிக நீளமான முக்கிய சண்டைக் காட்சி ஒன்று தொடர்ச்சியாக எடுக்கப்பட்டது பரபரப்பாக பேசப்பட்டது. விரைவில் இப்படத்தைப் பற்றிய அப்டேட் வெளியாக இருக்கும் நிலையில் இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் இரண்டாவது முறையாக அதர்வா கூட்டணி அமைக்க உள்ளார்.

கொத்தடிமைகளாக

கொத்தடிமைகளாக

பாலாவின் திரைப்படங்கள் என்றாலே அதில் உண்மை தன்மை மிகுதியாக இருக்கும் அந்த அளவிற்கு நடிகர்களும் சரி கதைக்களமும் சரி நம்பத்தகுந்த வகையில் எடுக்கப்படும். அந்த வகையில் பாலாவின் இயக்கத்தில் வெளியான பரதேசி படத்தில் தமிழ்நாட்டில் இருந்து கொத்தடிமைகளாக சென்ற மக்களின் வாழ்வியலை தத்ரூபமாக காட்டி பிரமிக்க வைத்திருந்தா பாலா அப்படத்திற்காக தேசிய விருதை வென்றார். அதர்வா இதில் ஹீரோவாக வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தி இருப்பார். அதுவரை படங்களில் அதர்வாவை அனைத்து இயக்குனர்களும் அழகாக காட்டி இருக்க முதல் முறையாக அதர்வாவை அடையாளமே தெரியாத அளவிற்கு பாலா மாற்றியிருந்தார். பரதேசியில் சவாலான கதாபாத்திரம் என்று தெரிந்தும் அதில் மிகச் சிறப்பாக நடித்து முடித்து அதர்வா அதைத் தொடர்ந்து நடித்த படங்கள் அனைத்தும் வெற்றி பெற்று வர நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பாலாவின் இயக்கத்தில் இணைய உள்ளார்.

மீண்டும் பாலா கூட்டணி

மீண்டும் பாலா கூட்டணி

ராவான கதைகளை இயக்கி வந்த பாலா கடைசியாக அர்ஜுன் ரெட்டி படத்தை தமிழில் வர்மா என்ற பெயரில் இயக்கி துருவ் விக்ரமை அறிமுகப்படுத்த இருந்தார். ஆனால் அந்த படம் ரிலீசுக்கு தயாராக இருந்தும் தயாரிப்பு குழுவிற்கு வர்மா படத்தின் மீது திருப்தி அளிக்கவில்லை என மீண்டும் படப்பிடிப்பை வேறொரு இயக்குனரை வைத்து எடுத்து முடித்து ஆதித்ய வர்மா என்ற பெயரில் ரிலீஸ் செய்தனர். வர்மாவுக்கு பிறகு மிகப் பெரிய சங்கடத்தை சந்தித்துள்ள பாலா அதன் பிறகு எந்த ஒரு படத்தையும் இயக்கவில்லை. இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அடுத்த படத்தை நடிகர் அதர்வாவை வைத்து இயக்க உள்ளார். சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க சூர்யாவும் இதில் சிறப்பு தோற்றத்தில் தோன்ற உள்ளார்.

குருதி ஆட்டம்

குருதி ஆட்டம்

இதற்கிடையில் சற்குணம் கூட்டணியில் மீண்டும் இணைந்து புதிய திரைப்படத்தில் அதர்வா நடிக்க அதன் படப்பிடிப்பு திண்டுக்கல் மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கபடி கதை களத்தைப் பின்னணியாகக் கொண்டு உருவாகி வரும் இந்தப் படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக ஆஷிகா ரங்கநாத் நடிக்கிறார். இதற்கிடையே தள்ளிப்போகாதே, குருதி ஆட்டம், ஒத்தைக்கு ஒத்த போன்ற படங்கள் அதர்வாவின் நடிப்பில் அடுத்தடுத்து வெளியாக இருக்க இதில் "குருதி ஆட்டம்" திரைப்படம் 8 தோட்டாக்கள் பட இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் உருவாகி உள்ளது. மேலும் பவானி சங்கர் கதாநாயகியாக நடித்திருக்கிறார். ராதிகா சரத்குமார், ராதாரவி முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ராக்போர்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருக்கிறது யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

ரிலீஸ் அப்டேட்

ரிலீஸ் அப்டேட்

2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இதன் படப்பிடிப்பு மிக விரைவாகவே முடிந்து படம் ரிலீசுக்கு தயாராகி இருந்தது. சென்ற ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்த நிலையில்தான் இந்தியாவில் கொரோனா முதல் அலை மிக வேகமாக பரவி திரையரங்குகள் உடனடியாக மூடப்பட்டதால் குருதி ஆட்டம் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. அதன்பிறகு ஓடிடியில் பல திரைப் படங்கள் வெளியானாலும் குருதி ஆட்டம் ஓடிடியில் வெளியிடுவது பற்றிய எந்த ஒரு முயற்சியையும் படக்குழு எடுக்கவில்லை. இந்த நிலையில் "குருதி ஆட்டம்" ரிலீஸ் பற்றிய முக்கிய அப்டேட் தற்பொழுது வெளியாகி உள்ளது. ஆகஸ்ட் 23-ஆம் தேதி முதல் திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்டும் என தமிழக அரசு அறிவித்ததை அடுத்து குருதி ஆட்டம் திரைப்படமும் மிக விரைவில் வெளியாக உள்ளது. அதிகாரப்பூர்வ தேதியை இன்னும் ஓரிரு வாரத்திற்குள் படக்குழு வெளியிட உள்ளது. இந்த செய்தியை அறிந்த அதர்வா ரசிகர்கள் பெரும் எதிர்பார்பில் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X