அதர்வா -பிரியா பவானி சங்கர்... க்யூட் சிங்கிள்... லவ்லீ பேர்... கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

சென்னை : அதர்வா, பிரியா பவானி சங்கர் லீட் கதாபாத்திரங்களில் நடித்துவரும் படம் குருதி ஆட்டம்.

இந்த படத்தின் லிரிக் வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. நாயகன் அதர்வா இந்த சிங்கிளை வெளியிட்டுள்ளார்.

யுவன்சங்கர் ராஜா இசையில் படம் உருவாகியுள்ள நிலையில், இந்த மாதத்தை சிறப்பாக லவ் பாடலுடன் துவங்கலாம் என்று யுவன் தெரிவித்துள்ளார்

தள்ளிப் போகும் ரிலீஸ்

தள்ளிப் போகும் ரிலீஸ்

நடிகர் அதர்வா, பிரியா பவானி சங்கர், ராதாரவி, ராதிகா சரத்குமார் நடிப்பில் நடிப்பில் உருவாகியுள்ள படம் குருதி ஆட்டம். கடந்த 2018ல் துவங்கப்பட்ட இந்த படம் பல்வேறு காரணங்களால் ரிலீஸ் தள்ளிப் போயுள்ளது. 8 தோட்டாக்கள் படத்தை இயக்கிய மிஷ்கினின் உதவியாளர் ஸ்ரீ கணேஷ் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

யுவன் இசை

யுவன் இசை

க்ரைம் த்ரில்லராக உருவாகியுள்ள இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் யுவன் சங்கர் ராஜா. இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு இந்த படத்தின் சிங்கிள் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இதையொட்டி இன்றைய தினம் படத்தின் முதல் சிங்கிள் லிரிக் வீடியோவாக வெளியிடப்பட்டுள்ளது.

க்யூட் ஜோடி

க்யூட் ஜோடி

ரங்க ராட்டினம் என்று துவங்கும் இந்த பாடலை படத்தின் நாயகன் அதர்வா வெளியிட்டுள்ளார். மேலும் யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து பணிபுரிவது எப்போதுமே சந்தோஷத்தை கொடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த பாடலில் அதர்வா மற்றும் பிரியா பவானி சங்கர் ஜோடி மிகவும் க்யூட்டாக உள்ளது.

சிறப்பான காதல்

சிறப்பான காதல்

இதனிடையே இந்த மாதத்தை சிறப்பான காதலுடன் துவங்கலாம் என்று இசையமைப்பாளர் யுவன் தெரிவித்துள்ளார். மேலும் படத்தின் பாடலையும் பகிர்ந்துள்ளார். இவரது இசை இந்த படத்திற்கு சிறப்பாக கைக்கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X