»   »  செம போத ஆகாதா.... என்ன தலைப்பு இது?

செம போத ஆகாதா.... என்ன தலைப்பு இது?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அதர்வா தான் தயாரித்து, நடிக்கும் அடுத்த படத்திற்கு செம போத ஆகாதா? என்று தலைப்பு வைத்திருக்கிறார்.

தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் அதர்வா. பத்ரி வெங்கடேஷின் பாணா காத்தாடி மூலம் அறிமுகமான அதர்வா தொடர்ந்து பரதேசி, சண்டிவீரன் போன்ற படங்களில் நடித்துக் கவனம் ஈர்த்தவர்.

ஈட்டி, கணிதன் என்று அடுத்தடுத்து அதர்வாவின் நடிப்பில் வெளியான 2 படங்களும் நல்ல வெற்றியைப் பெற்றுள்ளன.

இந்நிலையில் தன்னுடைய கிக்காஸ் நிறுவனம் சார்பில் தான் தயாரித்து நடிக்கும் படத்திற்கு, 'செம போத ஆகாதா' என்று தலைப்பு வைத்திருக்கிறார்.

வரவர தமிழ் சினிமாவில் கதை என்பது இரண்டாம்பட்சம் தான் என்னும் நிலை ஏற்பட்டு விட்டது. இப்போதெல்லாம் மொத்தப் படத்தையும் முடித்து விட்டுத் தான் படத்தின் தலைப்பையே அறிவிக்கிறார்கள்.

அந்தளவிற்கு தலைப்புப் பஞ்சம் இங்கே தலைவிரித்தாடுகிறது. மற்றொருபுறம் புகழ்பெற்ற பழைய படங்களின் தலைப்பையே புதுப்படங்களுக்கும் சூட்டி அழகு பார்க்கின்றனர்.

சமீப காலங்களில் படங்களுக்கு சூட்டப்பட்ட தலைப்புகள் இவை: திரிஷா இல்லேன்னா நயன்தாரா, ஹலோ நான் பேய் பேசுறேன், பக்கிப் பயலுக, நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும், கடவுள் இருக்கான் குமாரு, வெர்ஜின் மாப்பிள்ளை, ரெமோ, தொடரி.

தமிழ் சினிமாவில் என்று தணியும் இந்த தலைப்புப் பஞ்சம்?

English summary
Atharvaa's Next Movie Titled by "Semma Botha Aagatha".

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil