Don't Miss!
- News
பிரச்சனைக்கு நடுவே.. உச்சநீதிமன்றத்துக்கு 5 புதிய நீதிபதிகள்.. மத்திய அரசு ஒப்புதல்.. என்ன நடந்தது?
- Sports
களத்தில் இறங்கிய கிங் கோலி.. பயிற்சி முகாமில் நடந்த சுவாரஸ்யம்.. கச்சேரி இம்முறை இருக்கு
- Finance
பிப்.6-8 RBI நாணய கொள்கை கூட்டம்.. மீண்டும் ரெப்போ விகிதம் உயருமா..?
- Automobiles
மாருதி ஷோரூம்ல கூட்டம் குவியுது... எல்லாம் இந்த காரை பாக்கதான்... விற்பனையகங்களுக்கு வர தொடங்கிய ஃப்ரான்க்ஸ்!
- Lifestyle
புதன் பெயர்ச்சியால் பிப்ரவரி 07 முதல் அடுத்த 20 நாட்கள் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்..
- Technology
சூரியனில் அதிகரிக்கும் கருப்பு புள்ளிகளால் விஞ்ஞானிகள் பதட்டம்.! சூரிய புயல் அபாயம் உருவாகிறதா?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ரஜினியிடம் கேள்வி கேட்டு மடக்கிய அதிதி, மிரண்டுப் போன ஷங்கர்: அப்புறம் என்ன நடந்துச்சுன்னு தெரியுமா?
சென்னை: 'விருமன்' படத்தின் மூலம் கார்த்தியின் ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார் அதிதி ஷங்கர்.
இயக்குநர் ஷங்கரின் மகளான அதிதிக்கு முதல் படம் வெளியாகும் முன்னரே அதிக வரவேற்பு காணப்படுகிறது.
'விருமன்' படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிதி, சூப்பர் ஸ்டார் ரஜினியுடனான கலகலப்பான நினைவுகளை பகிர்ந்துள்ளார்.
என்ன
இப்படி
ஆகிப்போச்சு..சிவகார்த்திகேயனின்
“மாவீரன்“
படப்பிடிப்பு
நிறுத்தமா?

நம்ம வீட்டு பொண்ணு அதிதி ஷங்கர்
தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குநர் என பெயர் எடுத்தவர் ஷங்கர். 'ஜென்டில்மேன்' படம் தொடங்கி, இறுதியாக அவர் இயக்கத்தில் வெளியான '2.O' திரைப்படம் வரை, அனைத்துமே பிரமாண்டத்தின் உச்சம் தான். அவரது மகளான அதிதி ஷங்கர், 'விருமன்' படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்துள்ளார். கிராமத்துப் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தில், அதிதியை பார்த்த ரசிகர்கள் அனைவரும், அவரை நம்ம வீட்டு பொண்ணாகவே கொண்டாடுகின்றனர்.

எதிர்பார்ப்பில் கார்த்தியின் விருமன்
கொம்பன் படத்தைத் தொடர்ந்து கார்த்தியும் இயக்குநர் முத்தையாவும் இணைந்துள்ள 'விருமன்' படம், வரும் 12ம் தேதி வெளியாகிறது. இதனிடையே 'விருமன்' படத்தின் ஆடியோ, ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சி சமீபத்தில் மதுரையில் நடைபெற்றது. மேலும், படத்தின் ட்ரெய்லருக்கு நல்ல வரவேற்பு கிடத்துள்ளதால், 'விருமன்' மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

கவனம் ஈர்க்கும் அதிதி
'விருமன்' வெளியாகும் முன்னரே, படத்தின் நாயகி அதிதி பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார். தொடர்ந்து அவர் பங்கேற்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும், அதிதியின் சுட்டித்தனம் ரசிக்க வைக்கிறது. விருமனை தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் 'மாவீரன்' படத்திலும் இணைந்துள்ளது, குறிப்பிடத்தக்கது. இன்னொருபக்கம் அவர் மீது நெப்போடிசம் விமர்சனங்களும் எழுந்து வருகின்றன.

ஆல் டைம் ஃபேவரைட் சூப்பர் ஸ்டார்
இந்நிலையில், விருமன் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடனான தனது பழைய நினைவுகள் குறித்து பகிர்ந்துள்ளார் அதிதி. அதில், "தனக்கு எப்பவுமே பிடித்த நடிகர் தலைவர் ரஜினி தான், அவரும் அப்பா ஷங்கரும் இணைந்து எடுத்த படமான 'சிவாஜி' தான் எனக்கு ஆல்டைம் ஃபேவரைட்" எனவும் கூறியுள்ளார்.

ரஜினியிடம் வம்பிழுத்த அதிதி
மேலும், சிவாஜி படம் வெளியான பின்னர், சூப்பர் ஸ்டாரின் பிறந்தநாள் அன்று, இயக்குநர் ஷங்கர் ரஜினிக்கு போனில் வாழ்த்துக் கூறியுள்ளார். "அப்போது நான் போனை வாங்கி, ரஜினி சாரிடம் சிவாஜி படத்தின் சில வசனங்களை பேசிக் காட்டுங்கள்" என சொன்னதாகவும், உடனே அப்பா ஷங்கர் மிரண்டுப் போய்விட்டதையும் குறிப்பிட்டுள்ளார் அதிதி. ஆனால், அதிதியின் விருப்பத்தைக் கேட்ட ரஜினி, அவர் விரும்பியபடியே சில வசனங்களை பேசி, அதிதியை ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளார். இதனை அதிதி ஷங்கர் நெகிழ்ச்சியுடன் கூறிய வீடியோ, இப்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.