»   »  விஜய்யை இயக்கும் 'ராஜா ராணி' புகழ் அட்லீ

விஜய்யை இயக்கும் 'ராஜா ராணி' புகழ் அட்லீ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இளைய தளபதி விஜய் 'ராஜா ராணி' பட புகழ் இயக்குனர் அட்லீயின் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம்.

இயக்குனர் ஷங்கர் விஜய்யை வைத்து நண்பன் படம் எடுத்தபோது அதில் துணை இயக்குனராக இருந்தவர் அட்லீ. பின்னர் அவர் ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியாவை வைத்து ராஜா ராணி என்ற படம் எடுத்து இயக்குனர் அவதாரம் எடுத்தார்.

இந்நிலையில் அவர் தனது அடுத்த படத்திற்கு யாரை அணுகியுள்ளார் தெரியுமா?

முதல் படமே

முதல் படமே

அட்லீ இயக்கிய முதல் படமே ஹிட்டானதுடன், விமர்சகர்களும் அவரை புகழ்ந்து எழுதினர். பழைய கதையை கூறினாலும் அதை புதிதாக ரசிக்கும்படியாக கூறியுள்ளார் என்றனர் விமர்சகர்கள்.

விஜய்

விஜய்

அட்லீ இளைய தளபதி விஜய்யை சந்தித்து ஒரு கதையை கூறி அதில் நடிக்குமாறு கேட்டுள்ளார். கதை விஜய்க்கு மிகவும் பிடித்துவிட்டதாம். அதனால் அட்லீயின் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துவிட்டாராம் விஜய்.

முருகதாஸ்

முருகதாஸ்

ஜில்லா வெற்றியில் திளைத்துக் கொண்டிருக்கும் விஜய் அடுத்ததாக தன்னை வைத்து துப்பாக்கி படம் எடுத்த ஏ.ஆர். முருகதாஸ் படத்தில் நடிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நேசன்

நேசன்

விஜய் தனக்கு வெற்றிப் படம் கொடுத்த ஜில்லா இயக்குனர் நேசனுடன் சேர்ந்து மீண்டும் படம் பண்ண விரும்புகிறாராம். இதை அவரே நேசனிடம் வாய்விட்டு கூறியதாகக் கூறப்படுகிறது.

English summary
It is told that Ilayathalapathy Vijay has agreed to act in Raja Rani director Atlee's next project.
Please Wait while comments are loading...