»   »  அட்லீ - ரஜினி சந்திப்பு.... அப்ப அடுத்த படம் கன்பர்மா?

அட்லீ - ரஜினி சந்திப்பு.... அப்ப அடுத்த படம் கன்பர்மா?

Posted By:
Subscribe to Oneindia Tamil
அய்யோ பாவம் ஜெயம் ரவி...

ரஜினியுடன் அட்லீ சந்திப்பது புதிதல்ல. ரஜினி நடித்த சிவாஜி, எந்திரன் படங்களில் இயக்குநர் ஷங்கரின் அசிஸ்டன்ட்தான் அட்லீ. அதனால் ரஜினியுடன் நல்ல பழக்கமுண்டு அட்லீக்கு.

திருமணமான கையோடு மனைவியை ரஜினியிடம் அழைத்துப் போய் ஆசி பெற்றவர் அட்லீ.

Atlee meets Rajini

ஆனால் இந்த முறை அவர் ரஜினியைச் சந்தித்ததற்கு ஒரு தனி முக்கியத்துவம் உள்ளது.

இந்த முறை அவர் ரஜினியைச் சந்தித்தது கதை சொல்ல. யெஸ், காலா, 2.ஓவுக்குப் பிறகு தீவிர அரசியலில் ஈடுபட்டாலும், ஒரு அழுத்தமான அரசியல் படம் தரும் ஆசை இருக்கிறது ரஜினிக்கு. அதற்கு பொருத்தமான இயக்குநருக்காக காத்திருந்தார். இந்த நேரத்தில்தான் அட்லீ கதை சொல்ல வந்திருக்கிறார்.

அட்லீ சொன்ன கதை ரஜினிக்கும் பிடித்துவிட்டதாம். விரைவில் அறிவிப்பு வரலாம் என்கிறார்கள்.

English summary
Director Atlee has met Superstar Rajinikanth and discussed a story for the later's next.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil