ஜவான் படத்தில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் வேற லெவல் ஆக்சன் ட்ரீட்: அட்லீ போடும் சீக்ரெட் ப்ளான்!

சென்னை: ஷங்கரிடம் உதவியாளராக இருந்து இயக்குநராக அறிமுகமானவர் அட்லீ.

தமிழில் முன்னணி இயக்குநராக வலம் வரும் அட்லீ, தற்போது ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்தை இயக்கி வருகிறார்.

ஜவான் படத்திற்காக அட்லீ பிரம்மாண்டமான சண்டைக் காட்சியை படமாக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாலிவுட் பறந்த அட்லீ

பாலிவுட் பறந்த அட்லீ

'ராஜா ராணி' திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான அட்லீ, அடுத்து தளபதி விஜய்யுடன் கூட்டணி வைத்தார். இந்தக் கூட்டணியில் முதலில் வெளியான தெறி திரைப்படம், ஆக்சனில் தெறிமாஸ் காட்டியது. அதனைத் தொடர்ந்தும் மெர்சல், பிகில் என பட்டையைக் கிளப்பியது விஜய் - அட்லீ காம்போ. கோலிவுட்டில் மாஸ் காட்டிய அட்லீ, இப்போது ஷாருக்கான் நடிப்பில் ஜவான் படத்தை இயக்குவதன் மூலம் பாலிவுட்டில் தடம் பதித்துள்ளார்.

மெகா பட்ஜெட்டில் உருவாகும் ஜவான்

மெகா பட்ஜெட்டில் உருவாகும் ஜவான்

ஷாருக்கான் ஜோடியாக நயன்தாரா, வில்லனாக விஜய் சேதுபதி, காமெடிக்கு யோகி பாபு ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தின் மூலம் அட்லீ - அனிருத் முதன்முறையாக கூட்டணி வைத்துள்ளனர். பான் இந்தியா படமான ஜவான், மெகா பட்ஜெட்டில் உருவாகி வருவதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே ஜவான் டைட்டில் மோஷன் போஸ்டரை வெளியிட்ட படக்குழு, படம் அடுத்தாண்டு ஜூன் 2ம் தேதி வெளியாகும் என ரிலீஸ் தேதியையும் அறிவித்துவிட்டது. இதனால், படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது.

அதிரடியாக ஒரு சண்டைக் காட்சி

அதிரடியாக ஒரு சண்டைக் காட்சி

முதற்கட்ட படப்பிடிப்புகளை மும்பையில் முடித்துவிட்ட அட்லீ, அடுத்து சென்னைக்கு ஷிப்ட் ஆக உள்ளார். ஜவான் படத்தின் படப்பிடிப்புக்காக சென்னை அருகே மிகப் பிரம்மாண்டமாக செட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. இந்த செட்டில், ஷாருக்கான் நடிக்கும் அதிரடியான சண்டைக் காட்சியை படமாக்க அட்லீ முடிவு செய்துள்ளாராம். ரசிகர்களுக்கான ஆக்சன் ட்ரீட்டாக இது இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

மும்பையில் இருந்து வரும் 200 பெண்கள்

மும்பையில் இருந்து வரும் 200 பெண்கள்

ஜவான் திரைப்படத்தில் இடம்பெறும் இந்த சண்டைக் காட்சியில், 200 முதல் 250 பெண்கள் வரை நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக பிரத்யோகமாக பயிற்சிப் பெற்ற பெண்கள், மும்பையில் இருந்து சென்னைக்கு வர இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், பயங்கரமான ரிஸ்க் நிறைந்த இந்த சண்டைக் காட்சியை, ஏழு நாட்களில் படமாக்க இயக்குநர் அட்லீ திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது. இதுகுறித்து படக்குழு தரப்பில் இருந்து இதுவரை தகவல் எதுவும் வெளியாகாவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X