விஜய், ஷாருக்கானுடன் பிறந்தநாள் கொண்டாட்டம்… ட்விட்டரை தெறிக்க விடும் அட்லீ

சென்னை: இளம் இயக்குநரான அட்லீ நேற்று தனது 36வது பிறந்தநாளை கொண்டாடினார்.

ஷாருக்கான் நடிக்கும் 'ஜவான்' படத்தை மிகப் பிரம்மாண்டமாக இயக்கி வருகிறார் அட்லீ.

இந்நிலையில், நேற்று பிறந்தநாள் கொண்டாடியது குறித்து அட்லீ பதிவிட்டுள்ள ட்வீட்டர் போஸ்ட் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி

குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி

பிரம்மாண்ட இயக்குநரான ஷங்கரின் உதவியாளராக இருந்த அட்லீ, 'ராஜா ராணி' படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். மணிரத்னத்தின் மெளன ராகம் படத்தை லேசாக பட்டி, டிங்கரிங் செய்து ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா ஆகியோரை வைத்து இயக்கினார் அட்லீ. இந்தப் படம் 2கே கிட்ஸ்களுக்கு பிடித்துப் போக, அப்படியே அடுத்து விஜய்யுடன் 'தெறி' படத்தில் இணைந்தார். தெறி கொடுத்த சூப்பர் ஹிட்டால், அடுத்தடுத்து விஜய்யுடன் ட்ராவல் செய்தார்.

கோலிவுட்டில் இருந்து பாலிவுட்

கோலிவுட்டில் இருந்து பாலிவுட்

தெறி படத்தைத் தொடர்ந்து மெர்சல், பிகில் என மேலும் இரண்டு ப்ளாக் பஸ்டர் படங்களை இயக்கி கெத்து காட்டினார் அட்லீ. அவர் இயக்கி 4 படங்களுமே சுட்டக் கதை என விமர்சனங்கள் வந்தாலும், பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தியதால் தப்பினார். கதைகள் அப்படி இருந்தாலும் மேக்கிங்கில் கவனம் ஈர்த்த அட்லீக்கு பாலிவுட்டில் இருந்து ஜாக்பாட் அடித்தது. முதன்முறையாக ஷாருக்கானுடன் இணைந்துள்ள அட்லீ, இப்போது 'ஜவான்' படத்தை இயக்கி வருகிறார்.

பிறந்தநாள் கொண்டாடிய அட்லீ

பிறந்தநாள் கொண்டாடிய அட்லீ

ஷாருக்கான் நடிப்பில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகி வரும் 'ஜவான்' திரைப்படம் அடுத்தாண்டு வெளியாகிறது. இதில், ஷாருக்கானுடன் நயன்தாரா, பிரியாமணி, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர், அனிருத் இசையமைக்கிறார். ஜவான் படத்தின் படபிடிப்பு மும்பை, சென்னை என மாறி மாறி நடந்து வருகிறது. இந்தப் படத்தில் அட்லீயின் ஃபேவரைட்டான விஜய்யும் கேமியோ ரோல் செய்வது கன்ஃபார்ம் ஆகியுள்ளது. இந்நிலையில், அட்லீ நேற்று (செப்.21) தனது 36வது பிறந்தநாளை கொண்டாடினார். இதனையடுத்து அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

ட்விட்டரை தெறிக்கவிட்ட அட்லீ

ட்விட்டரை தெறிக்கவிட்ட அட்லீ

இந்நிலையில், அட்லீ தற்போது அவரது ட்வீட்டரில் பதிவிட்டுள்ள போட்டோ பயங்கர ட்ரெண்டாகி வருகிறது. வலது பக்கம் விஜய்யும், இடதுபக்கம் ஷாருக்கானும் இருக்கும் புகைப்படத்தை அட்லீ வெளியிட்டுள்ளார். மூவருமே கறுப்பு உடையில் மாஸ் காட்ட, அதற்கு கேப்ஷனும் பதிவிட்டுள்ளார் அட்லீ. "என் பிறந்தநாளுக்கு இதைவிட வேறு என்ன வேண்டும். எனக்கு பிடித்த இரு ஆளுமைகளுடன் வாழ்வின் சிறந்த பிறந்தநாள் இது" என பதிவிட்டு ஷாருக்கான், விஜய் இருவரையும் டேக் செய்துள்ளார். அட்லீயின் இந்தப் ட்வீட்டர் பதிவு இப்போது வைரலாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X