ஒரே வார்த்தையில் அல்லு அர்ஜுனை அலற விட்ட அட்லி...அப்படி என்ன சொன்னாரு?

சென்னை : அல்லு அர்ஜுனிடம் ஒரே ஒரு வார்த்தையை சொல்லி அவருக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார் டைரக்டர் அட்லி. விபரம் அறிந்தவர்கள், அட்லியா இப்படி ஒரு காரியத்தை பண்ணிருக்கார் என ஆச்சரியமாக கேட்டு வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் மிக குறுகிய காலத்திலேயே புகழின் உச்சிக்கு சென்ற டைரக்டர்களில் அட்லியும் ஒருவர். ஆர்யா - நயன்தாரா நடித்த ராஜா ராணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு டைரக்டராக அறிமுகமானார். முதல் படமே கமர்ஷியல் ஹிட் கொடுத்ததால் அடுத்ததாக விஜய்யை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என வரிசையாக 3 பிளாக்பஸ்டர் வெற்றி படங்களை கொடுத்தார்.

இதனால் அட்லி அடுத்து யாரை இயக்க போகிறார் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில், அனைவருக்கும் ஆச்சரியம் தரும் வகையில் பாலிவுட்டில் சூப்பர் ஹீரோ ஷாருக்கானை வைத்து படம் எடுக்க போவதாக அறிவித்தார் அட்லி. லைன் என பெயரிடப்பட்ட இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். படம் கிட்டதட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கி வருவதாக கூறப்படுகிறது.

 அட்லி வந்தா தான் சரியாகும்

அட்லி வந்தா தான் சரியாகும்

இதற்கிடையில் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்த பீஸ்ட் படம் நெகடிவ் கமெண்ட்களை பெற்றதால், ரசிகர்கள் பலரும் விஜய்யை வைத்து அட்லி மீண்டும் ஒரு படம் எடுக்க வேண்டும். இவர்கள் காம்போவில் இன்னொரு கமர்ஷியல் ஹிட் கொடுத்தால் மட்டுமே பீஸ்ட் கொடுத்த நெகடிவ் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்க முடியும் என கூற துவங்கி விட்டனர்.

தளபதி 68 டைரக்டர் அட்லியா

தளபதி 68 டைரக்டர் அட்லியா

விஜய் தற்போது வம்சி பைடபள்ளி இயக்கும் தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார். இதை முடித்ததும் லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி 67 படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு பிறகு விஜய் நடிக்கும் தளபதி 68 படத்தை அட்லி இயக்க போவதாகவும், இது முற்றிலும் வித்தியாசமான கதையாக இருக்கும் என்றும் சமீபத்தில் தகவல் வெளியானது.

அட்லியை அழைத்த அல்லு அர்ஜுன்

அட்லியை அழைத்த அல்லு அர்ஜுன்

இந்நிலையில் லேட்டஸ்ட் தகவலாக, தனது படத்தை இயக்குவதற்காக அட்லியை அழைத்து பேசி உள்ளார் தெலுங்கு டாப் ஹீரோ அல்லு அர்ஜுன். விஜய்யை வைத்து வரிசையாக ஹிட் கொடுத்து விட்டு, தற்போது ஷாருக்கானை இயக்கி வருவதால், தனது படத்தையும் இயக்க அட்லியிடம் பேசி உள்ளார் அல்லு அர்ஜுன். அட்லியுடன், பான் இந்தியா படம் ஒன்றை பண்ண வேண்டும் என்பது தான் அல்லு அர்ஜுனின் பிளானாம். இதற்கு அட்லியும் ஓகே சொல்லி விட்டாராம்.

 100 கோடி சம்பளம் பேசிய லைகா

100 கோடி சம்பளம் பேசிய லைகா

அட்லி - அல்லு அர்ஜுன் இணையும் படத்தை லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பதாக கூட முடிவாகி விட்டதாம். புஷ்பா படத்திற்கு பிறகு அல்லு அர்ஜுன் தனது சம்பளத்தை உயர்த்தி விட்டதால் அட்லி இயக்கும் படத்திற்கு அல்லு அர்ஜுனுக்கு 100 கோடி சம்பளம் தருவதாக லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனமும் பேசி உள்ளது. புஷ்பா 2 படத்திற்கு முன்பாகவோ அல்லது அதற்கு பிறகோ அட்லி படத்தில் நடிக்க அல்லு அர்ஜுன் முடிவு செய்திருந்தாராம்.

அட்லி கொடுத்த ஷாக்

அட்லி கொடுத்த ஷாக்

ஆனால் இந்த படத்திற்காக அல்லு அர்ஜுனுக்கு 100 கோடி சம்பளம் பேசப்பட்டதால், தனக்கு 35 கோடி சம்பளம் வேண்டும் என கேட்டாராம் அட்லி. இதை கேட்டு ஷாக்கான அல்லு அர்ஜுன் மற்றும் லைகா நிறுவனம், இந்த படத்தை தற்போது வேண்டாம் என நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளார்களாம். மீண்டும் இந்த படம் துவங்கப்படுமா, அப்படி துவங்கப்பட்டால் அட்லியே டைரக்ட் செய்வாரா என்பது தெரியவில்லை. இதனால் அட்லி தற்போது இயக்கி வரும் ஷாருக்கான் - நயன்தாரா படத்தின் அப்டேட் எப்போது வரும் என அனைவரும் எதிர்பார்க்க துவங்கி விட்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X