»   »  மீண்டும் அட்லி - விஜய் கூட்டணி?

மீண்டும் அட்லி - விஜய் கூட்டணி?

Posted By:
Subscribe to Oneindia Tamil

தெறி படத்துக்குப் பிறகு விஜய்யும் அட்லியும் மீண்டும் இணைவார்கள் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் அந்த செய்தி கொஞ்ச காலம் அமுங்கிப் போயிருந்தது.

இப்போது மீண்டும் அந்த செய்தி வேறு விதமாக வெளியாகியுள்ளது.

Atlee - Vijay combination again

ஆரம்பத்தில் இந்தப் படத்தை கலைப்புலி தாணு தயாரிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் இப்போது அதில் ஒரு மாற்றம். தயாரிப்பாளர் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் என்கிறார்கள்.

ஏற்கெனவே ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் மிகப் பிரமாண்ட படத்தில் விஜய் நடிப்பார், சுந்தர் சி இயக்குவார் என்று கூறப்பட்டது. ஆனால் கால்ஷீட் பிரச்சினையால் விஜய் அதில் நடிக்கவில்லை. அவருக்குப் பதில் ஜெயம் ரவி நடிக்கிறார்.

இப்போது இதே தேனாண்டாள் பிலிம்ஸ் இன்னொரு படம் தயாரிக்கிறது. இதில்தான் விஜய் நாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்தைத்தான் அட்லி இயக்கவிருப்பதாகக் கூறுகிறார்கள்.

English summary
Sources says that actor Vijay is joining hands with Atlee again for an untitled movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X