»   »  தமிழ் மகன் நெட்டில் 'லீக்'!

தமிழ் மகன் நெட்டில் 'லீக்'!

Subscribe to Oneindia Tamil

சிவாஜியைத் தொடர்ந்து அழகிய தமிழ் மகன் படத்தின் பாடல்களும் சில இணைய தளங்களில் லீக் ஆகியுள்ளன.

Click here for more images

சமீபத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் பாடல்கள் அனைத்தும் அதிகாரப்பூர்வமாக ஆடியோ கேசட் வெளியாவதற்கு முன்பே இணைய தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

பிறகு படக் காட்சிகளும் நெட்டில் ரிலீஸானது. இதுகுறித்து ஏவி.எம். தரப்போ, இயக்குநர் ஷங்கர் தரப்போ எந்த விளக்கத்தையும் வெளியிடவில்லை.

இந் நிலையில் விஜய், நமிதா, ஸ்ரேயா நடித்துள்ள அழகிய தமிழ் மகன் படத்தின் பாடல்களும் இப்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளன.

சிவாஜி படத்திற்கும் ஏ.ஆர்.ரஹ்மான்தான் இசை. இந்தப் படத்திற்கும் ரஹ்மான்தான் இசை. அதிகாரப்பூர்வ ஆடியோ வெளியீட்டுக்கு முன்பாகவே அழகிய தமிழ் மகன் படத்தின் பாடல்களை இப்போது சில இணைய தளங்களில் இலவசமாக கேட்க, டவுன்லோடு செய்ய முடிகிறது.

அழகிய தமிழ் மகன் படத்தின் ஆடியோ ரிலீஸ் அடுத்த வாரம்தான் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு முன்பாகவே நெட்டில் பாட்டுக்கள் வெளியாகி விட்டதால் பரபரப்பாகியுள்ளது கோலிவுட் வட்டாரம்.

இதுகுறித்து தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் தரப்பில் கேட்டபோது, படத்தின் பாடல் உரிமையை எந்த இணைய தளத்திற்கும் வழங்கவில்லை என்று மறுத்தனர்.

அழகிய தமிழ் மகனில் மொத்தம் 6 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. ஆறு பாடல்களும் அருமையாக வந்துள்ளன. சிவாஜி கணேசனின் சூப்பர் ஹிட் பாடலான பொன்மகள் வந்தாள் பாடலின் ரீமிக்ஸ் கேட்சி ஆக வந்துள்ளது. ஒரு பாட்டை ரஹ்மானே பாடியுள்ளார்.

சிவாஜி படத்தின் பாடல்கள் முன் கூட்டியே நெட்டில் லீக் ஆகி கேசட் விற்பனையை எகிற வைத்தது.

அதே பாணியில் அழகிய தமிழ் மகன் பாடல்களும் வெளியாகியுள்ளதால், திட்டமிட்டே ஒரு குரூப் இப்படிச் செய்திருக்கலாமோ என்ற சந்தேகமும் திரையுலகில் எழுந்துள்ளது.

Read more about: azhagiya tamilmagan
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil