»   »  அஜீத் படத்தை அமெரிக்காவில் வெளியிடும் லிங்கா விநியோகஸ்தர்

அஜீத் படத்தை அமெரிக்காவில் வெளியிடும் லிங்கா விநியோகஸ்தர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

அஜீத் நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள என்னை அறிந்தால் படத்தை அமெரிக்காவில் வெளியிடுகிறது அட்மஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம்.

இந்த நிறுவனம்தான் ரஜினியின் லிங்கா படத்தையும் அமெரிக்காவில் வெளியிட்டுள்ளது.

என்னை அறிந்தால் படத்துக்கு ஏக எதிர்ப்பார்ப்பு உள்ளதால், முன்பைவிட அதிக அரங்குகளில் இந்தப் படத்தை வெளியிடவிருக்கிறார்கள்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டுத் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், இப்படத்தை அமெரிக்காவில் வெளியிடும் உரிமையை பிரபல வெளியீட்டு நிறுவனமான அட்மஸ் என்டர்டெய்ன்மெண்ட் என்ற நிறுவனம் பெற்றுள்ளது. இந்நிறுவனம் ஹைபர்பீஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து இந்த படத்தை வெளியிடுகிறது. .

‘என்னை அறிந்தால்' வருகிற ஜனவரி 14-ந் தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. 9-ம் தேதியே வெளியாகவிருந்த இந்தப் படம், ஷங்கரின் ஐ படத்துக்காக ஐந்து நாட்கள் தள்ளி வெளியாகிறது.

English summary
ATMUS entertainment is releasing Ajith's Goutham Menon directed Yennai Arinthaal movie in US.
Please Wait while comments are loading...