»   »  ஆன்ட்டிகளுக்குப் பிடித்த ஆன்ட்டி ஹீரோ வையாபுரி..! - சொன்னது யாரு தெரியுமா?

ஆன்ட்டிகளுக்குப் பிடித்த ஆன்ட்டி ஹீரோ வையாபுரி..! - சொன்னது யாரு தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : காமெடி நடிகர் வையாபுரி 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்களின் ஆதரவைப் பெற்றார். அவர் கடந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

பிக்பாஸ் வீட்டில் என்டர்டெயினராக இருந்து தற்போது எலிமினேட் செய்யப்பட்டிருக்கும் வையாபுரியை காமெடி நடிகர் சதீஷ் சந்தித்துள்ளார்.

வையாபுரியைச் சந்தித்திருக்கும் காமெடியன் சதீஷ் அவரோடு புகைப்படம் எடுத்து ட்விட்டரில் பதிவேற்றியுள்ளார்.

ஆன்ட்டி ஹீரோ :

புகைப்படத்தைப் பதிவேற்றியதோடு, 'அனைத்து ஆன்ட்டிகளுக்கும் பிடித்த ஆன்ட்டி ஹீரோ - வையாபுரி அண்ணன்' எனக் குறிப்பிட்டுள்ளார் சதீஷ்.

ஓவியாவை பார்க்கலையா :

சூப்பர் ப்ரோ... எப்போ ஓவியாவை மீட் பண்ணப் போறீங்க? நீங்க ஓவியாவைப் பார்க்க ஏற்கெனவே ட்ரை பண்ணிருப்பீங்களே?

அழாம பாத்துக்கோங்க :

பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது வையாபுரி பலமுறை தேம்பித் தேம்பி அழுததால், 'அழுவாம பாத்துக்கோங்க ப்ரோ' என கமென்ட் அடித்துள்ளார் ஒருவர்.

கலாய்க்காதீங்க :

'என்னை ரொம்ப ஓட்டாதடா' என வையாபுரி சதீஷைப் பார்த்துச் சொல்வதுபோல அவர் பிக்பாஸ் வீட்டுக்குள் அழுதுகொண்டிருந்த புகைப்படத்தைப் போட்டிருக்கிறார்கள்.

செம கலாய் :

'சினிமாவுலயும் நெஜத்துலயும் ஒரே மாதிரி இருக்கீங்க ப்ரோ... எதுக்குமே சிரிப்பு வரல' என சதீஷை செமையாக கலாய்த்திருக்கிறார் ஒருவர்.

சதீஷ் பாவம் :

'அனைத்து பாட்டிகளுக்கும் பிடித்த சதீஷ் தாத்தா நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்' என சதீஷை ஒருவர் கலாய்த்துள்ளார்.

பிந்துமாதவி :

'பிந்துமாதவிய ஆரவ், ஹரிஷ் கிட்ட விட்டுட்டு வந்துட்டோமேனு அவரே காண்டுல இருக்காரு' என ஒருவர் ரிப்ளை செய்துள்ளார்.

English summary
Vaiyapuri participated in the 'Biggboss' show and received support from fans. Comedian Sathish has met Vaiyapuri, who is currently being Eliminated.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil