புஷ்பா படத்தின் தெறிக்கவிடும் டயலாக்குடன் இன்ஸ்டாகிராமை கலக்கும் பிரபல கிரிக்கெட் வீரர்
சிட்னி : அல்லு அர்ஜுன் நடிப்பில் சமீபத்தில் வெளியான புஷ்பா படம் 300 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் சாதனை புரிந்துள்ளது.
Recommended Video
இந்தப் படம் பான் இந்தியா படமாக வெளியாகி அனைவரையும் கவர்ந்துள்ளது.
இந்தப் படத்தின் பாடல்கள் மற்றும் டயலாக்குகளை பிரபல கிரிக்கெட் வீரர்கள் டப்ஸ்மாஷ் செய்து வெளியிட்டு வருகின்றனர்.

நடிகர் அல்லு அர்ஜுன்
நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்து சமீபத்தில் வெளியான புஷ்பா படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையிலும் வசூல் மழையை பொழிந்துள்ளது. பான் இந்தியா படமாக வெளியான இந்தப்படம் இதுவரை 300 கோடி ரூபாயை வசூலித்துள்ளது.

சமந்தா நடனம்
இந்தப் படத்தில் சமந்தா ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ள நிலையில், அந்தப் பாடல் விமர்சனத்திற்கு உள்ளானது. ஆனால் அந்தப் பாடலை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். அவரது விவாகரத்தை அடுத்து இந்தப் பாடலில் அவர் நடனமாடியது விமர்சனங்களை ஏற்படுத்தியது. அவர் மீது வழக்கும் போடப்பட்டது.

சுகுமார் இயக்கம்
சுகுமார் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். இந்தப் படம் அல்லு அர்ஜுனுக்கு இந்திய அளவில் ஏராளமான ரசிகர்களை பெற்றுத் தந்துள்ளது. அவரது முந்தைய படமான அலா வைகுந்தபுரமுலு படத்தை இந்தியில் டப் செய்து வெளியிடவும் முயற்சிகள் நடந்தன.

டப்ஷ்மாஷ் செய்யப்படும் பாடல்கள்
இந்தப் படத்தின் பாடல்கள் அனைவரையும் கவர்ந்துள்ளது. பிரபலங்கள் பலரும் இந்தப் பாடலை டப்ஸ்மாஷ் செய்து தங்களது சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். சமீபத்தில் ஸ்ரீவள்ளி பாடலுக்கு ஹர்திக் பாண்டியா தனது பாட்டியுடன் ஆடியிருந்த வீடியோ வைரலானது.

டேவிட் வார்னர் வீடியோ
இதேபோல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னரும் புஷ்பா கெட்டப்பில் வீடியோ வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவும் வைரலான நிலையில், தற்போது அவருடைய மகளுடன் புஷ்பா படத்தில் பிரபல டயலாக்கான புஷ்பான்னா ஃப்ளவர்னு நினைச்சியா? ஃபயரு என்று ஆக்ஷனுடன வீடியோ வெளியிட்டுள்ளார்.

10 லட்சத்தை நெருங்கிய வியூஸ்
இன்ஸ்டாகிராமில் இந்த வீடியோ வெளியான 24 மணிநேரம் ஆவதற்குள் தற்போது 10 லட்சம் வியூஸ்களை நெருங்கியுள்ளது. எப்போதுமே தமிழ், தெலுங்கு உள்ளிட்ட இந்திய மொழிகளின் சிறப்பான படங்களின் டயலாக்குகளை வெளியிடுவதை வார்னர் வாடிக்கையாக வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











