Don't Miss!
- Sports
புதிய தலைமை பயிற்சியாளராக லக்ஷ்மண் நியமனம்.. இந்திய அணியில் அதிரடி திருப்பம்.. காரணம் என்ன?
- News
7 பேர் மட்டும் தான் தமிழர்களா? பேரறிவாளன் விடுதலையை எதிர்த்து காங்கிரஸ் நாளை அறப்போராட்டம்!
- Finance
2 நிமிடங்களில் கடனுக்கான ஒப்புதல்.. ஹெச்டிஎஃப்சி கொடுத்த சூப்பர் அறிவிப்பு..!
- Automobiles
டாடா விற்கு தலைவலியை உருவாக்கும் ஹூண்டாய்... அடுத்த வருசம் இருக்குது பெரிய வேட்டை...
- Technology
மழையாக பொழிந்த மர்ம உலோக பந்து- பதற்றத்தில் குஜராத் கிராம வாசிகள்: சம்பவ இடத்துக்கு வந்த ஆராய்ச்சி குழு!
- Lifestyle
இந்த 5 ராசிக்காரங்கள எல்லோரும் ஈஸியா ஏமாத்திருவங்களாம்... முட்டாள்த்தனம் இவங்ககூடவே பிறந்ததாம்...!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
‘புஷ்பா‘ அல்லு அர்ஜுனாக மாறிய டேவிட் வார்னர்… இணையத்தில் ட்ரெண்டாகும் வீடியோ!
சென்னை : புஷ்பா திரைப்படத்தின் பாடலுக்கு, தான் ஆடுவதைப்போல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் மாஃபிங் செய்து வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
வீடியோவிற்கு பல கிரிகெட் வீரர்கள் வேடிக்கையாக தங்களது கருத்தை பகிர்ந்து வருகின்றனர்.
சைக்கோ த்ரில்லர் படத்தில் நடிக்கும் நட்டி... படத்துல நட்டிக்கு 4 நாயகிகளாம்!
சமீப காலமாக கிரிக்கெட் வீரர்கள் சமூக வலைதளங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. அதில் டேவிட் வார்னர் முக்கியமானவராக மாறியுள்ளார்.

புஷ்பா
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் 'புஷ்பா' படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, ஃபகத் பாசில் ஐபிஎஸ் அதிகாரியாக நடித்திருந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியான இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது.

ஆட்டம் போடும் பிரபலங்கள்
இப்படத்தின் இடம் பெற்ற அனைத்துப்பாடல்களும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளன. ஸ்ரீ வள்ளி பாடல், ராஷ்மிகா அசத்தலாக ஆட்டம் போட்ட வா சாமி பாடல், சமந்தாவின் ஐட்டம் பாடல் என ஒவ்வொரு பாட்டும் மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்தன. இப்படத்தில் இடம் பெற்றுள்ள அனைத்து பாடலுக்கும் திரைப்பிரபலங்கள் ரசித்து ரசித்து ஆட்டம் போட்டு இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பதிவிட்டு வருகின்றனர்.

செம வீடியோ
இந்நிலையில்,புஷ்பா திரைப்படத்தின் பாடலுக்கு, தான் ஆடுவதைப்போல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் மாஃபிங் செய்து வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. புஷ்பா படத்தில் வரும் பாடலில் அல்லு அர்ஜுன் முகத்திற்கு பதிலாக தன் முகத்தை மாஃபிங் செய்து வெளியிட்ட வீடியோவிற்கு பல கிரிகெட் வீரர்கள் வேடிக்கையாக தங்களது கருத்தை பகிர்ந்து வருகின்றனர்.

புட்டபொம்மா பாடலுக்கு
அல்லு அர்ஜூன் மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வசூலை வாரிக்குவித்த அல வைகுண்ட புரம் லோ திரைப்படத்தில் இடம் பெற்ற புட்ட பொம்மா பாடலுக்கு கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தனது மனைவியுடன் நடனமாடி வீடியோ வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.