»   »  இந்தியாவின் ஸ்டால்லோன் அஜீத்: வெளிநாட்டு நாளிதழ் புகழாரம்

இந்தியாவின் ஸ்டால்லோன் அஜீத்: வெளிநாட்டு நாளிதழ் புகழாரம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆஸ்திரியாவை சேர்ந்த நாளிதழ் ஒன்று அஜீத்தின் 'தல 57' படம் குறித்து செய்தி வெளியிட்டதுடன் அவரை இந்தியாவின் சில்வர்ஸ்டார் ஸ்டால்லோன் என்று தெரிவித்துள்ளது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் 'தல 57' படத்தின் படப்பிடிப்பு ஆஸ்திரியாவில் உள்ள கரிந்தியா நகரில் நடந்து வருகிறது. படத்தின் அதிரடி ஆக்ஷன் காட்சிகளை படமாக்கி வருகிறார்கள்.

Austrian newspaper calls Thala as Indian Sylvester Stallone

வெளிநாட்டு நடிகர்களை வைத்து அஜீத் வரும் ஆக்ஷன் காட்சியை படமாக்கியுள்ளனர். அந்த காட்சியில் ஹெலிகாப்டர் எல்லாம் பயன்படுத்தியுள்ளனர். இதை பார்த்த உள்ளூர் நாளிதழ் படப்பிடிப்பு தளத்திற்கு வந்து அஜீத்தை புகைப்படம் எடுத்து செய்தி வெளியிட்டுள்ளது.

செய்தியில் அஜீத்தை இந்தியாவின் சில்வர்ஸ்டார் ஸ்டால்லோன் என்று தெரிவித்துள்ளது. ஹாலிவுட்டின் அதிரடி ஆக்ஷன் நாயகனுடன் அஜீத்தை அந்த நாளிதழ் ஒப்பிட்டுள்ளதை தல ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்.

அஜீத் கருப்பு நிற உடையில் பார்க்க ஃபிட்டாக எஃப்.பி.ஐ. ஏஜெண்ட் போன்று அம்சமாக உள்ளார். இந்த படத்தில் அவர் சால்ட் அன்ட் பெப்பர் லுக்கை மெயின்டெய்ன் செய்துள்ளார்.

Read more about: thala 57, ajith, தல 57, அஜீத்
English summary
An Austrian newspaper which published a news on Thala 57 has called Ajith as Indian Sylvester Stallone.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil