தலைவி படம் எப்படி இருக்கு... எழுத்தாளர் தனஞ்செயன் என்ன சொல்கிறார்

சென்னை : ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கங்கனா ரணாவத் நடித்துள்ள வாழ்க்கை படமான தலைவி படம் செப்டம்பர் 10 ம் தேதியான நாளை தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படங்களில் இதுவும் ஒன்று.

Author Thanajayans review on Thalavi movie

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளதால் இந்த படம் கூடுதல் ஸ்பெஷலாக பார்க்கப்படுகிறது. மார்ச் மாதமே ரிலீசாகி இருக்க வேண்டிய இந்த படம் தமிழக சட்டசபை தேர்தல், கொரோனா, லாக்டவுன், தியேட்டர்கள் மூடல் உள்ளிட்ட காரணங்களால் தள்ளி போனது.

Recommended Video

Thalaivi Movie Review | Poster Pakiri | Filmibeat Tamil

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ரிலீசாக உள்ள இந்த படத்தில் ஜெயலலிதா கேரக்டரில் கங்கனாவும், எம்ஜிஆர் ரோலில் அரவிந்த் சாமியும், சசிகலா ரோலில் பூர்ணாவும் நடித்துள்ளனர். இவர்கள் தவிர சமுத்திரக்கனி, தம்பி ராமைய்யா, பாக்யஸ்ரீ உள்ளிட்டோர் முக்கிய ரோல்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் தேசிய விருது பெற்ற எழுத்தாளர் டாக்டர் தனஞ்செயன், தலைவி படத்தின் ப்ரிவ்யூ பார்த்து விட்டு அது தொடர்பாக தனது விமர்சனத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பலர் படத்தின் மீதான ஆர்வம் மிகவும் அதிகரித்திருப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர்.

தனஞ்செயன் பதிவிட்ட ட்வீட்டில், இந்தியாவில் உருவாக்கப்பட்ட வாழ்க்கை படங்களில் மிக சரியான, தத்ரூபமான படங்களில் தலைவியும் ஒன்று. டைரக்டர் விஜய்யின் அளவில்லாத ஆர்வம், அர்ப்பணிப்பு இதில் தெரிகிறது. மிகுந்த ஈடுபாட்டுடன் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மிக சிறப்பாக எடுத்துக்காட்டி உள்ளார். கங்கனா தனது நடிப்பில் மிக அற்புதம். அதே போல் எம்ஜிஆர்.,ஆக வரும் அரவிந்த்சாமியை அனைவருக்கும் பிடிக்கும். மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த படத்திற்காக கங்கனா உடல் எடையை அடையாளமே தெரியாத அளவிற்கு அதிகரித்தும், குறைத்தும் இருந்தார். ஏற்கனவே வெளியான தலைவி படத்தின் ஸ்டில்கள் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது. தலைவி படம் கங்கனா, அரவிந்த்சாமி ரசிகர்களிடம் மட்டுமல்ல, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா, சினிமா ரசிகர்களின் ஆதரவை நிச்சயம் பெறும் என கூறப்படுகிறது.

தமிழகத்தில் தியேட்டர்கள் திறக்கப்பட்ட பிறகு ரிலீசாகும் முதல் பெரிய பட்ஜெட் படம் தலைவி தான். இன்று விஜய் சேதுபதி நடித்த லாபம் படம் தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட்டாலும் அது சிறிய பட்ஜெட் படமாகவே பார்க்கப்படுகிறது. லாபம் படத்திற்கு மக்களிடம் எப்படி வரவேற்பு உள்ளது என்பதை பொறுத்தே மற்ற படங்களுக்கான வரவேற்பை கணிக்க முடியும் என சினிமா விமர்சகர்கள் பலர் தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X