»   »  அவள் - மழையிலும் அசரடிக்கும் வசூல் மழை!

அவள் - மழையிலும் அசரடிக்கும் வசூல் மழை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

அடிக்கிற காத்துல அம்மி கல்லே பறக்குற மாதிரி பிரம்மாண்ட நிறுவனங்கள், பிரபல நடிகர்கள் நடித்த படங்கள், பிரம்மாண்டமாய் விளம்பரம் செய்து வெளியான தமிழ் படங்களெல்லாம் வந்த வேகத்திலேயே திரும்பி இருக்கின்றன.

ஆனால் கடலோர மாவட்டங்களில் தொடர் மழை பெய்தபோதும் வசூல் ரீதியாக வெற்றிப் படமாகி இருக்கிறது அவள் படம்.

புதிய பாணி பேய்ப் படம்

புதிய பாணி பேய்ப் படம்

சித்தார்த் - ஆண்ட்ரியா நடிப்பில் வெளிவந்துள்ள பேய் படம் அவள். கதை ஒன்றும் புதிதல்ல. வழக்கமான பேய்க் கதைதான். வழக்கமான தமிழ் சினிமாவில் பேய் விரட்ட பக்தி, மலையாள மாந்தீரிகன் என்கிற பார்முலாவில் இருந்து விலகி எடுக்கப்பட்டபடம். இந்தி, தெலுங்கு, தமிழ் என மும்மொழிகளில் தயாரிக்கப்பட்டு ரீலீஸ் ஆன படம்.

250 அரங்குகள்

250 அரங்குகள்

தமிழகத்தில் 250 க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் திரையிடப்பட்ட அவள் தொடக்க நாட்களில் வசூல் மந்தமாகவே இருந்தது. வழக்கமான குத்துப்பாட்டு, சண்டை காட்சிகள் இப்படத்தில் இல்லை. ஒரு வீட்டுக்குள் நடக்கும் சம்பவங்களின் தொகுப்பாக திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தாலும் பார்வையாளனை நகர விடாமல் 'அவள்' படத்தின் மேக்கிங் இருந்ததால் இளைஞர்களை தியேட்டருக்கு வர வைத்தது இந்தப் படம்.

செம வசூல்

செம வசூல்

முதல் வார முடிவில் அவள் தமிழகத்தில் 5.50 கோடி ரூபாய் மொத்த வசூல் செய்திருந்தது. கடலோர மாவட்டங்களில் தொடர் மழையால் அனைத்து படங்களின் வசூல் பாதிக்கப்பட்டது. பல படங்களின் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. ஆனால் அவள் படம் தடையின்றி நகர்புறங்களில் 50% பார்வையாளர்களுடன் ஓடிக் கொண்டிருப்பது ஆச்சர்யமானது என்கிறார்கள் தியேட்டர் உரிமையாளர்கள்.

3வது வாரமும்

3வது வாரமும்

தொடர்ந்து புதிய படங்கள் வந்தும் அவள் படம் அசராத வசூலை பெற்றுள்ளது. இரண்டு வாரத்தில் தமிழ் நாட்டில் அவள் ரூ10 கோடி மொத்த வசூலைக் கடக்கும். நவம்பர் 17ல் வருகின்ற படங்கள் சுமார் ரகம் என்றால் 3வது வாரம் அவள் படம் முக்கிய நகரங்களில் தொடரும் என்கின்றனர் விநியோகஸ்தர்கள் வட்டாரத்தில்.

English summary
Recently released horror movie Aval is collecting big amount in theaters.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X