twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    “அவன் இவன்“ ஜமீன்தார் ஜி.எம் குமார்..மருத்துவமனையில் திடீர் அனுமதி!

    |

    சென்னை : பிரபல இயக்குநரும், நடிகருமான ஜி.எம்.குமார் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    வெள்ளித்திரையில் மட்டுமில்லாமல் சின்னத்திரையிலும் தனது திறமையை நிரூபித்தவர் ஜி.எம் குமார்.

    பன்முகத் திறமை கொண்ட ஜி.எம் குமார் வயது ஆனாலும் தன்னுடைய திறமை குறையாது என்பதை பல த்திரைப்படங்களில் நடித்து நிரூபித்து காட்டி உள்ளார்.

    ஜி.எம்.குமார்

    ஜி.எம்.குமார்

    ஜி.எம்.குமார் என்றதும் பலருக்கு தெரியாது ஆனால், அவன் இவன் திரைப்படத்தில் நடித்த ஜமீன்தார் என்றால். ஓ அவரா என்பார்கள் ஏன் என்றால் அந்த கதாபாத்திரம் அப்போது பரபரப்பாக பேசப்பட்ட கதாபாத்திரமாகும். இந்த படம் இவருக்கு சிறந்த துணை நடிகருக்கான விஜய் விருதை பெற்றுத்தந்தது. அவன் இவன் படத்தில் இவர் நிர்வாணமாக நடித்தது சர்சையையும் கிளப்பியது.

    வில்லன் அவதாரம்

    வில்லன் அவதாரம்

    இவர் நடிகர் மட்டுமல்ல , இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் கதையாசிரியராகவும் பணியாற்றியுள்ளார். இவர், அறுவடை நாள் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இதையடுத்து பாரதிராஜாவின் கேப்டன் மகள் படத்தில் வில்லனாக நடித்து வில்லன் அவதாரம் எடுத்துள்ளார்.

    பல வெற்றிப்படங்களில்

    பல வெற்றிப்படங்களில்

    இதையடுத்து, காதல் வைரஸ், ராமச்சந்திரா, தொட்டி ஜெயா, வெயில், மச்சக்காரன், ஆயுதம் செய்வோம், குருவி, தாரை தப்படை என இன்னும் பல படங்களில் ஜி.எம்.குமார் நடித்துள்ளார். இதில் தாரை தப்பட்டை படம் இவருக்கு பெயரை பெற்றுத்தந்தது. அண்மையில் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியான நவம்பர் ஸ்டோரியில் க்ரைம் எழுத்தாளராக நடித்திருந்தார். தனுஷின் நடிப்பில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்ற கர்ணன் படத்தில் துரியோதனன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

    மருத்துவமனையில் திடீர் அனுமதி

    மருத்துவமனையில் திடீர் அனுமதி

    இந்நிலையில், நடிகர் ஜி.எம்.குமார் திடீர் உடல நலக் குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைந்து குணமடைய வேண்டும் என திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    English summary
    Avan ivan Famous actor gm kumar hospitalised due to illness
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X