»   »  அந்த நடிகைக்கு ஐஸ்வர்யா ராய்னு நினைப்பு: ஹீரோ விளாசல்

அந்த நடிகைக்கு ஐஸ்வர்யா ராய்னு நினைப்பு: ஹீரோ விளாசல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: தயாரிப்பாளர் மீது எந்த தவறும் இல்லை, நடிகை அவந்திகா ஷெட்டி தான் ஐஸ்வர்யா ராய் என்ற நினைப்பில் ஓவராக செய்கிறார் என்று கன்னட நடிகர் குருநந்தன் தெரிவித்துள்ளார்.

ராஜா கன்னடா மீடியம் படத்தின் ஹீரோயினான அவந்திகா ஷெட்டி தயாரிப்பாளர் சுரேஷ் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார். தனக்கு சம்பள பாக்கி இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் படத்தின் ஹீரோ குருநந்தன் இது குறித்து கூறியிருப்பதாவது,

தயாரிப்பாளர்

தயாரிப்பாளர்

சினிமா துறையில் உள்ள சிறந்த தயாரிப்பாளர்களில் ஒருவர் சுரேஷ். ஜென்டில்மேன். அவர் படக்குழுவை தனது குடும்பத்தார் போன்று பார்த்துக் கொள்கிறார். அவந்திகா மீது தான் தப்பு உள்ளது.

அவந்திகா

அவந்திகா

எங்கள் தயாரிப்பாளர் மிகவும் அமைதியானவர். படப்பிடிப்பு துவங்கியபோது ஒழுங்காக இருந்த அவந்திகா நாட்கள் செல்லச் செல்ல ஓவர் அலப்பரை செய்ய ஆரம்பித்தார்.

சுரேஷ்

சுரேஷ்

அவந்திகாவின் தொல்லையை தாங்க முடியாமல் தான் அவரை படத்தில் இருந்து நீக்க முடிவு செய்தார் தயாரிப்பாளர். ரூ. 40 லட்சம் வரை படத்திற்காக செலவு செய்த நிலையில் அவந்திகாவை நீக்கினால் பணக் கஷ்டம் ஏற்படும் என்று படக்குழு தயாரிப்பாளரிடம் கூறியது.

ஷூட்டிங்

ஷூட்டிங்

அவந்திகா ஷூட்டிங்கிற்கு சரியாக வர மாட்டார். தான் தான் பெரிய ஆள் என்ற நினைப்பு அவருக்கு. ஒரு முறை மும்பை சென்று 20 நாட்கள் அங்கேயே இருந்துவிட்டார். அவரால் ஷூட்டிங்கில் குழப்பம்.

வெளிநாடு

வெளிநாடு

வெளிநாட்டில் ஷூட்டிங் நடத்த வேண்டியிருந்தது. ஆனால் அவந்திகா வரவில்லை. அவர் இல்லாமல் ஷூட்டிங் நடத்தினோம். அவரின் ஹோட்டல் பில்லுக்கே தயாரிப்பாளர் அதிகம் செலவு செய்துள்ளார். காலை 10.30 மணிக்கு மேல் தான் ஹோட்டலில் இருந்தே கிளம்புவார்.

பேச்சு இல்லை

பேச்சு இல்லை

அவந்திகா படக்குழுவினரிடம் பேச மாட்டார். அவருக்கு தான் ஒரு ஐஸ்வர்யா ராய் என நினைப்பு. ஐஸ்வர்யா ராய் கூட இப்படி எல்லாம் சீன் போட மாட்டார் என்கிறார் குருநந்தன்.

Read more about: actor, sandalwood, ஹீரோ
English summary
Actor Gurunandan, who plays the male lead in Raju Kannada Medium said that actress Avantika Shetty caused all problems and not the producer Suresh.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil