»   »  "அவருடே ராவுகள்"... ப்ரிவியூ பார்த்து தற்கொலை செய்து கொண்ட தயாரிப்பாளரின் காதலியும் தற்கொலை!

"அவருடே ராவுகள்"... ப்ரிவியூ பார்த்து தற்கொலை செய்து கொண்ட தயாரிப்பாளரின் காதலியும் தற்கொலை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கொல்லம்: தற்கொலை செய்து கொண்ட "அவருடே ராவுகள்" படத்தின் தயாரிப்பாளரின் காதலியும் தற்போது தற்கொலை மூலம் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம், கொல்லம் மனையில் குளங்கரை பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மகன் அஜய் கிருஷ்ணன் (28). இவர் மலையாளத்தில் பிருத்விராஜ் நடித்த மெம்மரீஸ், ‘சீன் 1 நம்முடைய வீடு' உள்பட சில மலையாள படங்களிலும், டிவி சீரியலிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் அவர், பிரபல நடிகர் ஆஸிப் அலியை கதாநாயகனாக வைத்து ‘அவருடே ராவுகள்' என்ற பெயரில் ஒரு படத்தை தயாரித்து வந்தார். அஜய் தயாரித்த முதல் படம் இதுவாகும். இந்த படத்தில் ஆசிப் அலி, உன்னி முகுந்தன், வர்கீஸ், வினய், ஹனி ரோஸ், லீனா போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

தற்கொலை...

தற்கொலை...

இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து விட்டன. அடுத்தமாதம் படத்தை வெளியிட அஜய் கிருஷ்ணன் திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் கடந்த மாதம் 23ம்தேதி இரவு, எர்ணாகுளத்தில் இருந்து கொல்லத்தில் உள்ள தனது வீட்டிற்கு வந்த அஜய், தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

படம் திருப்தியில்லை...

படம் திருப்தியில்லை...

இவர் தற்கொலைக்குக் காரணம் இவர் தயாரித்த படம்தான் என்று கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன் தன்னுடைய ‘அவருடே ராவுகள்' படத்தின் பிரிவியூ ஷோவைப் பார்த்த அஜய்க்கு, அது திருப்தியளிக்கவில்லை. ரூ.4 கோடி செலவு செய்து தான் தயாரித்த படம் வர்த்தக ரீதியாக வெற்றி அடையாதோ என்று அச்சமடைந்த அஜய், இரண்டு நாட்களாக கடும் மன உளைச்சலில் இருந்ததாகவும், பின்னர் தற்கொலை செய்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியானது.

அதிர்ச்சி...

அதிர்ச்சி...

இந்த சம்பவம் மலையாளத் திரையுலகையே பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தான் தயாரித்த படம் வெற்றி பெறாது என்று தயாரிப்பாளரே தற்கொலை செய்துக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

காதலியும் தற்கொலை...

காதலியும் தற்கொலை...

இந்நிலையில், காதலனின் திடீர் மரணத்தால் அதிர்ச்சியுற்ற அஜயின் காதலி, வினிதா நாயரும் தற்போது தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர் பெங்களூருவில் பேஷன் டிசைனிங் படித்தவர்.

கடைசிக் கடிதம்...

கடைசிக் கடிதம்...

அஜயின் திடீர் தற்கொலையால் மன உளைச்சலில் இருந்ததாகவும், அதனால் இந்த முடிவை தான் எடுத்ததாகவும் வினிதா தனது கடைசிக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிகிறது. அஜயைப் போலவே வினிதாவும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Hardly two weeks after Malayalam film producer Ajay Krishnan's suicide, his girlfriend too was found dead.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil