Don't Miss!
- News
பிபிசி ஆவணப்படம் பார்த்த மாணவர்களை கைது செய்வது கருத்துரிமைக்கு எதிரானது.. வேல்முருகன் ஆவேசம்!
- Sports
உலக கோப்பை ஹாக்கி.. வெற்றியுடன் தொடரை நிறைவு செய்த இந்தியா.. 9வது இடத்தை பிடித்தது
- Finance
ஏலத்திற்கு வந்த டயானா-வின் வெல்வெட் கவுன்.. விலை மட்டும் கேட்காதீங்க..!
- Lifestyle
ஆண்களே! நீங்க செக்ஸ் சாட் பண்ணும்போது... இந்த தப்ப மட்டும் தெரியமா கூட பண்ணாதீங்க...!
- Automobiles
புதிய இன்னோவா காரின் புக்கிங் திடீரென நிறுத்தம்... இனிமேல் கிடைக்காதா? டொயோட்டா செய்த காரியத்தால் கலக்கம்!
- Technology
அம்மாடி.! ரூ.14000 வரை தள்ளுபடியா? Samsung டேப்லெட் வாங்க பெஸ்ட் நேரம் இதான் டோய்.!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
என்னது... அட்வான்ஸ் புக்கிங்கில் இத்தனை கோடி வசூலா...? பாக்ஸ் ஆபிஸை தெறிக்கவிட்ட அவதார் 2
சென்னை: 2009ம் ஆண்டு ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான அவதார் திரைப்படம் மிகப்பெரிய சாதனை படைத்தது.
வசூலில் மட்டும் இல்லாமல் ஆஸ்கர் உட்பட ஏராளமான சர்வதேச திரைப்பட விருதுகளையும் வென்றிருந்தது.
இந்நிலையில் அவதார் இரண்டாம் பாகம் டிசம்பர் 16ம் தேதியான இன்று வெளியாகி புதிய சாதனை படைத்துள்ளது.
Avatar 2 Review: ஜேம்ஸ் கேமரூனின் ப்ளூ மேஜிக் மீண்டும் கை கொடுத்ததா? அவதார் 2 விமர்சனம்!

சொல்லி அடித்த அவதார் 2
ஹாலிவுட் திரையுலகின் ஜாம்பவான் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில், 2009ல் வெளியான அவதார் பிரம்மாண்டமான வெற்றிப் பெற்றது. ஜோ சல்டானா, சாம் வொர்திங்டன், சிகர்னி வீவர் உள்ளிட்டோர் நடித்திருந்த இந்தப் படம், வசூலிலும் புதிய சாதனை படைத்தது. இதனால் அவதார் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். அவர்களின் எதிர்பார்ப்பு 13 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று நனவாகியுள்ளது. அவதார்: தி வே ஆஃப் வாட்டர் என்ற டைட்டில் உருவாகியுள்ள இரண்டாம் பாகம், இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.

ரசிகர்களிடம் வரவேற்பு
ஜேக், நேத்ரி அவரின் குழந்தைகளை மையமாக வைத்து ஜேம்ஸ் கேமரூன் இந்த பாகத்தை இயக்கியுள்ளார். மேக்கிங், விஷுவல் ட்ரீட் என எல்லா வகையிலும் அவதார் திரைப்படம் இரண்டாம் பாகம் மிரட்டியுள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அவதார்: தி வே ஆஃப் வாட்டர் படத்தில் நீருக்கடியில் சூட்டிங் செய்யும் டெக்னாலஜியை இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் பயன்படுத்தியுளதும், ரசிகர்களை மெய் சிலிர்க்க வைத்துள்ளதாம். ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என இந்திய மொழிகள் உள்பட மொத்தம் 160 மொழிகளில் வெளியாகியுள்ள அவதார் 2, முதல் பாகத்தை போல வசூலில் சாதனை படைக்கும் என சொல்லப்படுகிறது.

அட்வான்ஸ் புக்கிங்கில் சாதனை
தற்போது வெளியாகியுள்ள அவதார் 2 திரைப்படம் ஐமேக்ஸ் திரையரங்குகளில் 3டியில் பார்க்க வேண்டும் எனவும் ரசிக்ர்கள் கூறி வருகின்றனர். முக்கியமாக சென்னையில் சில திரையரங்குகளில் அவதார் 2 வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்தியாவில் அவதார் 2 படத்திற்கான அட்வான்ஸ் புக்கிங் புதிய சாதனையை படைத்துள்ளது. படம் வெளியாகும் முன்பே வியாழக்கிழமை வரை மட்டுமே மொத்தம் 20 கோடி ரூபாய் வசூலித்துள்ளது அவதார் 2. இதுவரை வேறு எந்த ஹாலிவுட் படமும் இந்தியாவில் நிகழ்த்தாத சாதனை என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரம், இந்திய படங்களுக்கும் அட்வான்ஸ் புக்கிங்கில் சவால் விட்டுள்ளது அவதார் 2.

100 கோடி வசூல் சாதாரணம்
இந்தியாவில் ஐமேக்ஸ் திரைகளில் 3 டி டெக்னாலஜியில் அவதார் 2 படம் பார்க்க, 2500 முதல் 3000 ரூபாய் வரை டிக்கெட்டுக்கு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாம். ஆனாலும், டிக்கெட்டுகள் வேகமாக விற்றுத் தீர்ந்துள்ளன. இதனால், முதல் வாரத்தில் இந்தியாவில் மட்டுமே 50 கோடி வசூலை தாண்டிவிடும் என்றும், இரண்டே வாரங்களில் 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் அவதார் 2 இணையும் எனவும் சினிமா ஆர்வலர்கள் கூறிவருகின்றனர். முன்னதாக யஷ் நடிப்பில் வெளியான கேஜிஎஃப் 2 படத்தின் அட்வான்ஸ் புக்கிங் 80 கோடி ரூபாய்க்கு நடந்திருந்தது. இதுதான் இந்திய சினிமாவில் சாதனையாக இருந்தது. தற்போது அதற்கு அடுத்த இடத்தில் ஹாலிவுட் படமான அவதார் 2 இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.