அவதார் தி வே ஆஃப் வாட்டர் ட்ரெய்லர் செய்த சாதனை… ட்விட்டரில் தொடர்ந்து ட்ரெண்டிங்
சென்னை: 2009ம் ஆண்டு ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான அவதார் திரைப்படம் மிகப்பெரிய சாதனை படைத்தது.
வசூலில் மட்டும் இல்லாமல் ஆஸ்கர் உட்பட ஏராளமான சர்வதேச திரைப்பட விருதுகளையும் வென்றிருந்தது.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள அவதார் இரண்டாம் பாகத்தின் ட்ரெய்லர் புதிய சாதனை படைத்து வருகிறது.

மிரட்டல் அவதார்
ஹாலிவுட் திரையுலகின் ஜாம்பவான் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில், 2009ம் ஆண்டு வெளியான திரைப்படம் அவதார். ஜோ சல்டானா, சாம் வொர்திங்டன், சிகர்னி வீவர் உள்ளிட்டோர் நடித்த இந்தப் படம், உலக அளவில் வசூலில் பிரம்மாண்டமான சாதனை படைத்தது. மேலும், ஆஸ்கர் போட்டியிலும் விருதுகளை வென்ற அவதார் படத்தின் இரண்டாம் பாகத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். முதல் பாகம் வெளியாகி 13 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது அவதார் செகண்ட் பார்ட் ரிலீஸாகவிருக்கிறது.

அவதார்- தி வே ஆஃப் வாட்டர்
அவதார்- தி வே ஆஃப் வாட்டர் என்ற டைட்டிலில் உருவாகியுள்ள இரண்டாம் பாகம் டிசம்பர் 16ம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது. ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 25 கோடி அமெரிக்க டாலர்கள் செலவில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது இந்தப் படம். இந்நிலையில் அவதார் தி வே ஆஃப் வாட்டர் ட்ரெய்லரை படக்குழு நேற்று வெளியிட்டது. இந்த ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள், முதல் பாகத்தை போன்றே இதுவும் பிரமாண்டமாக இருப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர்.

புதிய சாதனை
அவதார் 2 படமும் வசூலில் சாதனை படைக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில், அவதார் 2 ட்ரெய்லரை உலகம் முழுவதும் பல லட்சம் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். ஆங்கில ட்ரெய்லர் மட்டும் 124K வீயூஸை கடந்துள்ளது. அதேபோல், இந்த ட்ரெய்லர் தொடர்ந்து டிவிட்டரிலும் ட்ரெண்ட்ங்கில் இருந்து வருகிறது. ஜேக், நேத்ரி அவரின் குழந்தைகளை மையமாக வைத்து ஜேம்ஸ் கேமரூன் இந்த பாகத்தை இயக்கியுள்ளார். 13 வருடங்கள் ரசிகர்கள் காத்திருந்ததற்கு தரமான விஷுவல் ட்ரீட் கிடைத்துள்ளது.

160 மொழிகளில் ரிலீஸ்
அவதாரில் இருக்கும் உயிரினங்கள் மனிதர்களிடமிருந்து தங்கள் உலகத்தை எப்படி பாதுகாக்கிறார்கள் என்பதே கதையாக விரிகிறது. அவதார்: தி வே ஆஃப் வாட்டர் படத்தில் நீருக்கடியில் சூட்டிங் செய்யும் டெக்னாலஜியை இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. அவதார் செகண்ட் பார்ட்டுடன், 3ம் பாகத்தையும் சேர்த்தே இயக்கிவிட்டார் ஜேம்ஸ் கேமரூன், இந்தத் திரைப்படம் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், ஆகிய இந்திய மொழிகள் உள்பட 160 மொழிகளில் டிசம்பர் 16ம் தேதி ரிலீஸாகிறது.


Click it and Unblock the Notifications











