Don't Miss!
- News
"NO. 1".. கிளம்பியாச்சு சூறாவளி.. மொத்த கட்சியையும் முந்திக்கொண்டு.. வேட்பாளரை அறிவித்த கட்சி.. அடடே
- Automobiles
அந்தமான், நிக்கோபார் தீவுகளுக்கு டூர் அழைத்து செல்லும் ஐஆர்சிடிசி... காதலர் தினத்தை கொண்டாட சூப்பரான பிளேஸ்!
- Lifestyle
புதன் வக்ர நிவர்த்தியால் பிப்ரவரி 07 வரை இந்த 3 ராசிக்கு கஷ்டங்கள் அதிகமா இருக்கும்.. கவனமா இருங்க..
- Sports
ஒரே கல்லில் 3 மாங்காய்.. சச்சினின் சாதனையை உடைத்தெறிந்த சுப்மன் கில்.. ரசிகர்கள் ஆச்சரியம்!
- Technology
இப்படி ஒரு 5G போனுக்காக வெயிட் பண்ணலாம் தப்பில்லை: ஒன்பிளஸ் சொன்ன நற்செய்தி.!
- Finance
கிடைப்பதை எல்லாம் விற்கும் எலான் மஸ்க்.. பீதியில் டிவிட்டர் ஊழியர்கள் ..?! உண்மை என்ன..?
- Travel
நியூயார்க் டைம்ஸின் 2023 ஆம் ஆண்டு பட்டியலில் இடம் பெற்ற ஒரே இந்திய மாநிலம்!
- Education
பெட்ரோலிய கழகத்தில் ரூ.81 ஆயிரத்தில் பணி வாய்ப்பு...!
அவதார் 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு... படம் பற்றி இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா?
சென்னை : உலக சினிமா ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அவதார் 2 எப்போது ரிலீசாக போகிறது, எத்தனை மொழிகளில் ரிலீசாக போகிறது என்பது உள்ளிட்ட பல விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
ஹாலிவுட் டைரக்டர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009ம் ஆண்டு டிசம்பர் மாதம் உலகம் முழுவதும் வெளிவந்த படம் அவதார். எபிக் சையின்ஸ் ஃபிக்சன் படமான இதை ஜேம்ஸ் கேமரூனே எழுதி, இயக்கி, தயாரித்து, எடிட்டிங்கும் செய்திருந்தார். இந்த படம் உலகம் முழுவதும் 14,000 க்கும் அதிகமான தியேட்டர்களில் 3டி வெர்சனில் வெளியிடப்பட்டது.
தமிழ் சினிமா கவலைப்பட தேவையில்லை... மணிரத்னம் கொடுத்த சூப்பர் பதில்

வசூல், விருதுகளை அள்ளிய அவதார்
237 கோடி மில்லியன் அமெரிக்க டாலர் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் அவதார். ரீ ரிலீசிற்காக 9 மில்லியன் டாலர்கள் செலவிட்டுள்ளனர். ஆனால் அந்த சமயத்தில் அதுவே பிரம்மாண்டத்தின் உச்சமாக பார்க்கப்பட்டது. இந்த படம் உலகம் முழுவதும் 2.847 பில்லியன் அமெரிக்க டாலர்களை வசூல் செய்தது. இந்த படம் 2010 ம் ஆண்டு ஆஸ்கர் விழாவில் அதிகபட்சம் 9 பிரிவுகளின் கீழ் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால் சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த விஷுவல் எஃபெக்ட், சிறந்த ப்ரொடக்ஷன் டிசைன் ஆகிய 3 ஆஸ்கார் விருதுகளை வென்றது.

இத்தனை வருட உழைப்பா
அவதார் படத்தின் இரண்டாம் பாகமாக அவதார் 2 படத்தை இயக்கி உள்ளார் ஜேம்ஸ் கேமரூன். இந்த படத்தை 20th Century Studios தயாரித்துள்ளது. 2014 ம் ஆண்டே அவதார் 2 படத்தை எடுக்க திட்டமிட்டார் ஜேம்ஸ் கேரூன். ஆனால் 2017 ல் தான் இந்த படத்தை துவக்கினார். அவதார் 2 படத்துடன் சேர்ந்து அவதார் 3 படத்தையும் இயக்கி உள்ளார். 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த படத்தின் ஷுட்டிங் முடிக்கப்பட்டது. ஆனால் அதற்கு பிறகு கொரோனா பெருந்தொற்று காரணமாக படத்தின் பணிகள் நிறுத்தப்பட்டன.

அவதார் 2 எப்போ ரிலீஸ்
தற்போது அவதார் 2 படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் முடிக்கப்பட்டு ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அவதார் 2 படம் வரும் டிசம்பர் 16ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது. உலகம் முழுக்க 160 மொழிகளில் அவதார் 2 ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவதார் 2 படம் 250 மில்லியன் டாலர் செலவில் எடுக்கப்பட்டுள்ளது.

ஜேம்சின் வேற லெவல் பிளான்
அவதார் 3 படம் பைனான்ஸ் தட்டுப்பாடு காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதாம். அவதார் 3 மட்டுமல்ல அவதார் 4, அவதார் 5 பாகங்கள் வரை எடுக்க ஜேம்ஸ் கேமரூன் திட்டமிட்டு வைத்துள்ளார். அவதார் படத்தை போலவே அவதார் 2 படமும் பிரம்மாண்ட வெற்றியை பெற்று, வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.