அவதார் பட ரிலீஸ் பற்றி ஜேம்ஸ் கேமரூன் போட்ட அதிரடி ட்வீட்.. ரசிகர்களுக்கு விஷுவல் ட்ரீட் உறுதி!

லாஸ் ஏஞ்சல்ஸ்: ஹாலிவுட்டின் பிரம்மாண்ட இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவாகி உள்ள அவதார் 2ம் பாகம் இந்த ஆண்டு டிசம்பர் 16ம் தேதி வெளியாகிறது.

Recommended Video

செப்டம்பரில் வருகிறது Avatar | சினிமா செய்திகள் அப்டேட்

இந்நிலையில், அவதார் 2ம் பாகத்திற்கு முன்பாக அவதார் படத்தை ரசிகர்களை பார்க்க வைக்க 4கே தொழில்நுட்பத்தில் ரீமாஸ்டரிங் செய்யப்பட்டு அதை வெளியிட முடிவு செய்துள்ளார் ஜேம்ஸ் கேமரூன்.

அவதார் வைப் ஆரம்பித்தால் தானே அவதார் பார்ட் 2வுக்கான எதிர்பார்ப்பு எகிறும் என்பதில் கவனமாக செயல்பட்டு வருகிறார் ஜேம்ஸ் கேமரூன்.

மீண்டும் வெளியாகும் அவதார்

மீண்டும் வெளியாகும் அவதார்

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009ம் ஆண்டு வெளியான அவதார் திரைப்படம் 25000 கோடி ரூபாய் வசூல் செய்து மிகப்பெரிய சாதனையை படைத்தது. அந்த படத்தின் வசூலை அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் திரைப்படம் ரீரிலிஸ் செய்யப்பட்டு முறியடித்தது. இந்நிலையில், உலக ரசிகர்களுக்காக அவதார் படம் மீண்டும் வெளியாக போகிறது.

4கே தொழில்நுட்பத்தில்

4கே தொழில்நுட்பத்தில்

அவதார் முதல் பாகமே கண்களுக்கு அப்படியொரு விஷுவல் ட்ரீட்டாக அமைந்தது. அந்த பாண்டோரா உலகம் மற்றும் அங்கே இருக்கும் செடி கொடிகள், மிருகங்கள் என அனைத்துமே கண்களுக்கு நிறைவான காட்சியை தந்தன. இந்நிலையில், 4கே தொழில்நுட்பத்தில் ரீமாஸ்டரிங் செய்யப்பட்டுள்ள அவதார் மீண்டும் திரைக்கு வருகிறது.

எப்போ

எப்போ

வரும் செப்டம்பர் 23ம் தேதி 4K 3D HDR தரத்தில் ரீமாஸ்டர் செய்யப்பட்ட அவதார் திரைப்படம் உலகம் முழுவதும் குறிப்பிட்ட திரையரங்குகளில் சில நாட்கள் பிரத்யேகமாக வெளியாக உள்ளன. அதன் அறிவிப்பை புதிய போஸ்டருடன் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் வெளியிட்டுள்லார்.

அவதார் 2வுக்கு வெயிட்டிங்

அவதார் 2வுக்கு வெயிட்டிங்

சுமார் 160 மொழிகளில் அவதார் 2ம் பாகம் டப் செய்யப்பட்டு வெளியாக போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தண்ணீருக்குள் அவதார் வாசிகள் எப்படி தங்களின் வாழ்க்கையை வாழப் போகின்றனர். அவர்களுக்கு புதிதாக என்ன பிரச்சனை எங்கிருந்து கிளம்பப் போகிறது. ஜேக் சுலிவன் அதை எப்படி சமாளிக்கப் போகிறார் என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நேரத்தில் அவர்களை மேலும், வெயிட்டிங்கிலேயே வெறியேற்ற அவதார் படம் வெளியாகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X