»   »  'அவதார்' ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ஜேம்ஸ் கேமரூன்!

'அவதார்' ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ஜேம்ஸ் கேமரூன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹாலிவுட் சினிமாவில் ரசிகர்களை பிரமிக்க வைக்கும் வகையில் நிறைய படங்கள் வெளியாகின்றன. அப்படி ஒட்டுமொத்த உலகமே மிகவும் வியந்து பார்த்த படம் 'அவதார்'.

ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய இப்படம் உலக அளவில் வசூலில் பல உச்சங்களைத் தொட்டது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்த 'அவதார்' படத்திற்கு ரசிகர் பட்டாளமே உருவானது.

'அவதார்' படத்தினைத் தொடர்ந்து ஐந்து பாகங்கள் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்தன. அவதார் படத்தின் முதல் சீக்குவலை ஜேம்ஸ் கேமரூன் தற்போது எடுத்து வருகிறார்.

ஜேம்ஸ் கேமரூன்

ஜேம்ஸ் கேமரூன்

அவதார் படத்தின் அடுத்த பாகம் வரும் 2020-ம் ஆண்டு டிசம்பரில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், 'அவதார்' படத்தின் பிரம்மா ஜேம்ஸ் கேமரூன் சமீபத்தில் ஒரு பேட்டியில் இது பற்றித் தெரிவித்துள்ளார்.

தண்ணீருக்கு அடியில்

தண்ணீருக்கு அடியில்

"இரண்டு மற்றும் மூன்றாம் பாகம் தண்ணீருக்கு அடியில் எடுக்கப்பட்டு வருகிறது. இது எங்களுக்கு மிகவும் சவாலான பணியாக இருக்கிறது. 4-வது மற்றும் 5-வது பாகங்கள் வருமா என்பது சந்தேகம் தான்." எனக் கூறியிருக்கிறார்.

வசூலில் சாதித்தால்தான் வரும்

வசூலில் சாதித்தால்தான் வரும்

அவதார் 2 மற்றும் 3-ம் பாகங்கள் வெற்றிகரமாக ஓடி வசூலில் கலக்கினால் மட்டும்தான் 4 மற்றும் 5-ம் பாகங்கள் உருவாகும்" என்று கூறியுள்ளார். அவர் சொல்வதும் நியாமாகத்தான் இருக்கிறது.

ரசிகர்கள் அதிர்ச்சி

ரசிகர்கள் அதிர்ச்சி

ஆனால், ஜேம்ஸ் கேமரூனின் இந்த பதிலால் 'அவதார்' ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அப்படியானால், 'அவதார்' படத்தின் 4 மற்றும் 5-ம் பாகங்கள் வர வாய்ப்பில்லை என தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

English summary
James Cameron directed 'Avatar' touched a wide range of collections worldwide. James Cameron is currently taking the first sequel of Avatar. He said, "If Avatar 2 and 3 don't make enough money, there's not going to be a 4 and 5".

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil