twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அயலான் படத்தில் அவதார் டீம்... இதெல்லாம் தேவையா பாஸ்... சிவகார்த்திகேயனை எச்சரிக்கும் ரசிகர்கள்?

    |

    சென்னை: சிவகார்த்திகேயனின் 'அயலான்' திரைப்படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது.
    பட்ஜெட் பிரச்சினை, கிராபிக்ஸ் பணிகள் காரணமாக அயலான் படத்தின் ரிலீஸ் தாமதமாவதாக சொல்லப்படுகிறது.
    இந்நிலையில், அயலான் படத்தில் ரசிகர்களே எதிர்பார்க்காத வகையில் ஒரு பிரம்மாண்டமான ட்ரீட் கொடுக்க சிவகார்த்திகேயன் முடிவு செய்துள்ளாராம்.

     சிவகார்த்திகேயனின் மாவீரன் படப்பிடிப்பு நிறுத்தம்.. இதுதான் காரணமா? பரபரக்கும் தகவல்! சிவகார்த்திகேயனின் மாவீரன் படப்பிடிப்பு நிறுத்தம்.. இதுதான் காரணமா? பரபரக்கும் தகவல்!

     சிவகார்த்திகேயனின் அயலான்

    சிவகார்த்திகேயனின் அயலான்

    'இன்று நேற்று நாளை' படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ரவிக்குமார், அடுத்து அயலான் படத்தை கையில் எடுத்தார். சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படம், 2018ம் ஆண்டு தொடங்கப்பட்டது. சிவகார்த்திகேயனுடன் ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிக்க, ஏஆர் ரஹ்மான் இசையமைப்பாளராக கமிட் ஆனார். இதனால்; இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு தாறுமாறாக எகிறியது. ஆனால், அயலான் படப்பிடிப்பு பாதி முடிந்த நிலையில், பட்ஜெட் பிரச்சினையால் ஷூட்டிங்கை தொடர முடியாமல் போனது.

     ஏலியன்ஸ் திரைப்படமா அயலான்?

    ஏலியன்ஸ் திரைப்படமா அயலான்?

    சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பரான ராஜா அயலான் படத்தை தயாரித்து வந்தார். ஆனால், பட்ஜெட் பிரச்சினையில் அவர் பாதியிலேயே விலகிவிட, கேஜிஆர் நிறுவனம் அயலான் படத்தை கைப்பற்றியது. அதன்பின்னர் அயலான் ஷூட்டிங் வேகமாக நடைபெற்றது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ஏலியன்ஸாக நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் அயலான் தான் தமிழில் முதல் ஏலியன்ஸ் திரைப்படமாக இருக்கும் என சினிமா ரசிகர்கள் காத்திருக்கின்றனர். சயின்ஸ் பிக்சன் ஜானரில் உருவாகி வருவதால் கோலிவுட்டில் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

     அயலானில் அவதார் டீம்

    அயலானில் அவதார் டீம்

    இந்தப் படத்திற்கான கிராபிக்ஸ் பணிகள் மட்டும் தாமதமாகிக் கொண்டே இருந்தது. இதனால் அயலான் கிராபிக்ஸ் வேலைகளை சீக்கிரம் முடிக்க வேண்டும் என அவதார் திரைப்படத்தில் பணிபுரிந்த டெக்னீஷியன்ஸ்களை களமிறக்கியுள்ளராம் சிவகார்த்திகேயன். அயலான் படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் தான் தரமான விஷுவல் ட்ரீட்டாக இருக்கும் என்பதால், சிவகார்த்திகேயன் ரொம்பவே எதிர்பார்த்துள்ளாராம். ஆனால், டான், பிரின்ஸ் என தொடர்ந்து பெரிய ஹிட் கொடுக்காத சிவகார்த்திகேயன், அயலான் படத்திற்காக அதிகமான பட்ஜெட்டை செலவழிக்க வேண்டாம் என எச்சரித்து வருகிறார்கள். படமும் தொடங்கி 5 ஆண்டுகள் ஆகிவிட்டதால், ரசிகர்களிடம் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்குமா என்பதும் விவாதமாகியுள்ளது..

     ரிலீஸ் தேதியுடன் எஸ்கே

    ரிலீஸ் தேதியுடன் எஸ்கே

    இந்நிலயில், அயலான் திரைப்படத்தை மார்ச் மாதம் ரிலீஸ் செய்ய சிவகார்த்திகேயன் முடிவு செய்துள்ளாராம். அதன்படி, இந்தப் படம் அடுத்தாண்டு மார்ச் 24 அல்லது 25ம் தேதி வெளியாகும் எனக் கூறப்படுகிறது. கிராபிக்ஸ் பணிகள் முழுவதும் முடிவடைந்த உடன் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வாரம் 16ம் தேதி வெளியான அவதார் 2, நெகட்டிவான விமர்சனங்களைப் பெற்றாலும் மேக்கிங், கிராபிக்ஸ் காட்சிகளை தான் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இந்த சூழலில் அயலான் படத்திற்கு அவதார் 2 டெக்னீஷியன்ஸ் டீம் களமிறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    The shooting of Sivakarthikeyan starrer Ayalaan has already been completed. The graphics work of this film has stopped halfway due to budget issues. In this case, it has been reported that Sivakarthikeyan’s Ayalaan will release on the 24th Or 25th of March 2023. An official announcement regarding the release date will be out soon. In this case, It has been reported Avatar technicians are working
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X