Don't Miss!
- News
அடேங்கப்பா.. "ட்விஸ்ட்டு".. எடப்பாடி பல்டி.. அண்ணாமலைக்கு போன் போட்ட சீனியர்கள்.. காத்து திரும்புதே!
- Automobiles
மாருதி, ஹூண்டாயை அண்ணாந்து பாக்க வைத்த டாடா! சம்பவம் லோடிங்! தளபதி 67-ஐ விட எதிர்பார்ப்பு எகிறிகிட்டே போகுது!
- Sports
டி20 வரலாற்றில் இந்தியாவின் மகத்தான வெற்றி.. 3வது டி20ல் சுப்மன் கில் தந்த ஷாக்.. ஆடிப்போன நியூசி!
- Finance
மூலதன செலவு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. நிதியமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க ஆசைப்படுறீங்களா? அப்ப இந்த உணவுகளை தெரியாமகூட சேர்த்து சாப்பிடாதீங்க!
- Technology
அந்த ஹார்திக் பாண்டியா போன் நியாபகம் இருக்கா? அறிமுக தேதி உறுதி! விலை இதுதானா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
மிரட்டலாக ஆன்லைனில் வெளியானது அவதார் 2 டிரைலர்....கொண்டாடும் ரசிகர்கள்
சென்னை : ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவாகி உள்ள அவதார் 2 படத்தின் டிரைலர் இன்று டிஜிட்டலில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
ஹாலிவுட் டைரக்டர் ஜேம்ஸ் கேமரூன் 2009 ம் ஆண்டு அவதார் படத்தை இயக்கினார். உலகிலேயே அதிக பொருட் செலவில் எடுக்கப்பட்ட படம் இது தான். அதே போல் வசூலில் சாதனை படைத்த படம் அவதார். பிரம்மாண்டத்தின் உச்சமாக பார்க்கப்படும் அவதார் படம், 2010 ம் ஆண்டு 3 ஆஸ்கர் விருதுகளை வென்றது.
சினிமாவில் உள்ள சாக்கடையை சுத்தம் செய்கிறேன்..ஆதாரத்துடனே கிசுகிசு பேசுகிறேன்.. பயில்வான் ரங்கநாதன்!

Avatar : The Way Of Water
அதற்கு பிறகு கிட்டதட்ட 12 ஆண்டுகள் கழித்து அவதார் 2 படத்தை இயக்கி உள்ளார் ஜேம்ஸ் கேமரூன். கொரோனா உள்ளிட்ட பல காரணங்களால் வெளியிடப்படாமல் இருந்த படத்திற்கு Avatar : The Way Of Water என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ரிலீஸ் தேதியும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

16 பிரிண்ட்களில் ரிலீஸ்
அவதார் 2 படம் டிசம்பர் 16 ம் தேதி உலகம் முழுவதும் தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. சுமார் 14,000 தியேட்டர்களில் 160 மொழிகளில் அவதார் 2 படத்தை திரையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதுவும் 3டி உள்ளிட்ட 16 விதமான பிரிண்ட்களில் இந்த படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. சாம், ஜியோ உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்திற்கு சிம்சன் ஃபிராங்கிளின் இசையமைத்துள்ளார்.

போஸ்டருடன் டிரைலர் ரிலீஸ்
அவதார் 2 படத்தின் டிரைலர் மே 6 ம் தேதி Doctor Stranger in the Multiverse of Madness படத்துடன் சேர்த்து தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்டது. இது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இன்று அவதார் 2 படத்தின் டிரைலர் ஆன்லைனில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. அதோடு அவதார் படத்தின் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

மிரட்டி இருக்கிறார் கேமரூன்
Avatar : The Way Of Water படத்தின் 60 சதவீதம் காட்சிகள் தண்ணீருக்கு அடியிலேயே எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பண்டாரா கடல் பகுதியில் நீருக்கு அடியிலான உலகத்தை தனக்கே உரிய பிரம்மாண்டமாக, மிக அழகாக காட்டி உள்ளார் ஜேம்ஸ் கேமரூன். பண்டா கடல் பகுதி, சல்லியர்கள் குடும்பம் உள்ளிட்டவைகளை பற்றியது தான் அவதார் 2 என்பதை டிரைலரிலேயே காட்டி உள்ளனர்.