அவதார் 2 பாக்ஸ் ஆபிஸ்: இந்தியாவில் புதிய வசூல் சாதனை... முதல் வாரத்தில் மட்டும் இத்தனை கோடியா?

சென்னை: ஜேம்ஸ் கேமரூன் இயக்கியுள்ள அவதார் இரண்டாம் பாகம் கடந்த 16ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
உலகம் முழுவதும் 150க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகியுள்ள அவதார் 2 திரைப்படம் முதல் வாரத்திலேயே மிகப் பெரிய வசூல் சாதனை படைத்துள்ளது.
இந்திய பாக்ஸ் ஆபிஸ் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் அவதார் 2வின் வசூல் ரசிகர்களை பிரமிக்க வைத்துள்ளது.

 அவதார் 2 முதல் வாரம் வசூல்

அவதார் 2 முதல் வாரம் வசூல்

13 ஆண்டுகள் காத்திருந்த உலக சினிமா ரசிகர்களின் கனவு கடந்த 16ம் தேதி நனவாகியுள்ளது. ஹாலிவுட்டில் ஜேம்ஸ் கேமரூன் இயக்கியுள்ள அவதார் படத்தின் இரண்டாம் பாகம் தான் அது. இந்நிலையில், 16ம் தேதி வெளியான அவதார் இரண்டாம் பாகம், எதிர்பார்த்ததை விட ரசிகர்களிடம் சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது. உலகம் முழுவதும் 160 மொழிகளில் வெளியான இந்தப் படம் வசூலிலும் புதிய சாதனை படைத்துள்ளது. இந்தியாவில் மட்டும் முதல் மூன்று நாட்களில் 100 கோடி வசூலை கடந்துள்ளது அவதார் 2.

 பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனை

பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனை

இந்தியாவில் டாக்டர் ஸ்ட்ரேன்ச் திரைப்படம் முதல் மூன்று நாட்களில் 126 கோடி ரூபாய் வசூல் செய்ததே சாதனையாக இருந்தது. தற்போது அதனை அவதார் 2 திரைப்படம் முறியடித்துள்ளது. இந்தியாவில் மட்டும் இதுவரை மொத்தம் 133 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், சீனா, வட அமெரிக்கா போன்ற நாடுகளிலும் அவதார் 2 வசூலில் சாதனை படைத்துள்ளதாக சொல்லப்படுகிற்து. இந்நிலையில், ஒட்டுமொத்தமாக உலகம் முழுவதும் அவதார் 2 படத்தின் கலெக்‌ஷனும் பாக்ஸ் ஆபிஸை பிரமிக்க வைத்துள்ளது.

 பட்ஜெட்டில் பாதி வசூல்

பட்ஜெட்டில் பாதி வசூல்

அதன்படி, முதல் மூன்று நாட்களில் உலகம் முழுவதும் 3500 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது அவதார் 2. இந்த திரைப்படம் மொத்தம் 7500 கோடி பஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. ஆனால், முதல் வாரத்திலேயே 3500 கோடி வசூலித்து பட்ஜெட்டின் பாதியை தட்டித் தூக்கியுள்ளது அவதார் 2. இது ஹாலிவுட் வரலாற்றில் புதிய சாதனை என்றே கூறப்படுகிறது. 2009ல் வெளியான அவதார் முதல் பாகத்தை விடவும், இரண்டாம் பாகம் விஷுவலாக சூப்பர் ட்ரீட் கொடுத்துள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். இதுவே படத்தின் வசூல் அதிகரிக்க காரணம் எனக் கூறப்படுகிறது.

 தொடர்ந்து வரவேற்பு

தொடர்ந்து வரவேற்பு

அவதார் 2 படத்திற்கு பாசிட்டிவ், நெகட்டிவ் என கலவையான விமர்சனங்களே கிடைத்துள்ளன. ஆனால், படத்தின் மேக்கிங் ரசிகர்களை சிலிர்க்க வைத்துள்ளது. இதனால், தொடர்ந்து வசூல் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஜோ சல்டானா, சாம் வொர்திங்டன், சிகர்னி வீவர் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்தை, ஜேக், நேத்ரி அவரின் குழந்தைகளை மையமாக வைத்து ஜேம்ஸ் கேமரூன் இயக்கியுள்ளார். மேக்கிங், விஷுவல் ட்ரீட் என எல்லா வகையிலும் ரசிகர்களை மிரட்டியுள்ள அவதார் 2, இன்னும் பல சாதனைகள் படைக்கும் எனவும் சினிமா ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X