டிரைலரே இப்படின்னா...அப்போ மெயின் பிக்சர் எப்படி இருக்கும்...மிரள வைத்த தமிழ்ராக்கர்ஸ் டிரைலர்

சென்னை : தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம், தற்போது வெப் சீரிஸ் தயாரிப்பில் இறங்கி உள்ளது. டைரக்டர் அறிவழகன் இயக்கி உள்ள புதிய வெப்சீரிஸ் "தமிழ் ராக்கர்ஸ்".

அருண் விஜய், வாணி போஜன், ஐஸ்வர்யா மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த வெப்சீரிஸின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த வெப்ர சீரிசின் டிரைலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.இதற்கு விகாஸ் பதிசா இசையமைத்துள்ளார்.

ஏவிஎம் நிறுவனத்தின் முதல் வெப்சீரியசாக தமிழ் ராக்கர்ஸ், பைரசி பற்றி ஆராய்ந்து, கண்டுபிடித்து, அதை அழிப்பது பற்றிய த்ரில்லர் கதையாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வெப்சீரிஸ் தமிழ் சினிமாவில் மிகப் பெரிய மாற்றத்தை கொண்டு வரும் என திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

எப்போ ரிலீஸ் ஆகுது

எப்போ ரிலீஸ் ஆகுது

தமிழ் சினிமா உலகிற்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக விளங்கும் பைரசிகள் எப்படி இயங்குகின்றன, எங்கிருந்து இயங்குகின்றன, இவர்களின் நோக்கம் என்ன என்பது பற்றி தீவிரமாக அலசி ஆராய உள்ளது. இந்த வெப் சீரிஸ் சோனி லைவ் ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் 19 ம் தேதி முதல் வெளியிடப்பட உள்ளது.

ஏவிஎம்.,ஐ கொண்டாடும் ரசிகர்கள்

ஏவிஎம்.,ஐ கொண்டாடும் ரசிகர்கள்

ஏவிஎம் நிறுவனம் மீண்டும் தயாரிப்பிற்கு திரும்பியது, அதுவும் இப்படி ஒரு முக்கியமாக கதையை வெப்சீரியசாக இயக்கி உள்ளதற்கு ரசிகர்கள் வாழ்த்தும், வரவேற்பும் தெரிவித்துள்ளனர். இது போன்ற நல்ல கன்டென்ட் கொண்ட படங்கள், வெப்சீரிஸ்களை தொடர்ந்து தயாரிக்கவும் ரசிகர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.தமிழில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த வெப்சீரிசை இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மற்ற மொழி வெர்சன்களிலும் வெளியிட ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

தள்ளி போன ஷுட்டிங்

தள்ளி போன ஷுட்டிங்

தமிழ் ராக்கர்ஸ் வெப் சீரிசின் ஷுட்டிங் இரண்டு ஆண்டுகளுக்கு முன் சென்னையில் துவங்கியது. ஆனால் கொரோனா உள்ளிட்ட பல காரணங்களால் ஷுட்டிங் தள்ளிப் போனதால் இந்த திட்டமிட்டபடி முடிக்க முடியாமல் போனது.

இவர் தான் டைரக்டரா

இவர் தான் டைரக்டரா

டைரக்டர் அறிவழகன், ரொமான்டிக் பேய் படமான ஈரம் படத்தின் முலமாக டைரக்டராக அறிமுகமானவர். அருண் விஜய் நடித்த த்ரில்லர் படமான குற்றம் 23 படத்தை இவர் தான் இயக்கினார். தற்போது அருண் விஜய் நடித்து ரிலீசிற்காக காத்திருக்கும் த்ரில்லர் ஸ்பை படமான பார்டர் படத்தையும் இவர் தான் இயக்கி உள்ளார்.

Recommended Video

Praveena Maya | On The spot select ஆனேன் | Iravin Nizhal | *Interview
எங்களுக்கு அதே கேள்வி தான் பாஸ்

எங்களுக்கு அதே கேள்வி தான் பாஸ்

ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் இந்த வெப் சீரிசின் டிரைலர் வெளியான சில நிமிடங்களிலேயே #TamilRockerz என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டிங் ஆக துவங்கி உள்ளது. இதை எப்போ ரிலீஸ் பண்ண போறீங்க. நீங்க கேட்குற அதே கேள்வி தான் எங்களுக்கும் பல வருடங்களாக ஓடிக் கொண்டிருக்கிறது...யார் அந்த தமிழ் ராக்கர்ஸ், அவங்கள பிடிக்கவோ, அழிக்கவோ முடியாதா, இவங்க மட்டும் எப்படி படம் தியேட்டரில் ரிலீசான சில மணி நேரங்களிலேயே முழு படத்தையும் நெட்டில் ரிலீஸ் செய்து விடுகிறார் என பல கேள்விகளை ஆர்வமாக கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X