»   »  உழைப்பு நேர்மை என்றால் ஜெயலலிதா தான்: ஏவிஎம் சரவணன் புகழாரம்

உழைப்பு நேர்மை என்றால் ஜெயலலிதா தான்: ஏவிஎம் சரவணன் புகழாரம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: உழைப்பு நேர்மை என்றால் ஜெயலலிதா தான் என தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன் தெரிவித்துள்ளார்.

உடல் நலக்குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி முதல் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதல்வர் ஜெயலலிதா நேற்று இரவு காலமானார்.

AVM Saravanan pays tribute to Jaya

ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்ட அவரின் உடலுக்கு அரசியல் தலைவர்களும், பொது மக்களும் அஞ்சலி செலுத்தினார்கள். இந்நிலையில் ஜெயலலிதா குறித்து தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன் கூறுகையில்,

தமிழகத்தில் மறக்க முடியாத பெயர் ஜெயலலிதா. நடிகையாக ஆரம்பித்து அதன் பிறகு அரசியலுக்கு வந்தவர். படத்தில் நடிக்கும்போதே அரசியல் தொடர்பான புத்தகங்கள் படிப்பது, அரட்டை அடிக்காமல் இருப்பது என தொழிலில் கவனம் செலுத்தியவர்.

இது மாதிரியான பெண்மணியை மீண்டும் பார்ப்பது கடினம். ஜான்சி ராணி போல இந்திரா காந்தி போல ஜெயலலிதா. இவர் போன்ற ஒரு பெண்மணி இனிமேல் வருவது கடினம்.

அவருக்கு சமமானவரை சொல்ல முடியாது. உழைப்பு நேர்மை என்றால் ஜெயலலிதா தான். நல்ல திறமைசாலியான பெண். தமிழகத்திற்குப் பெரிய இழப்பு என்றார்.

English summary
Jayalalithaa is the synonym of hard work and honesty, said producer AVM Saravanan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil