»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

"ஜெமினி பிக்சர்ஸ்" என்பது அந்தக் காலத்தில் பெரிய பட நிறுவனம். இப்போது அந்தப் பெயரிலேயே ஒரு படத்தைத் தயாரிக்கிறது, அதே போன்றபெருமையைப் பெற்ற ஏவி.எம். நிறுவனம்.

ஏவி.எம். நிறுவனம் நீண்ட நாட்களுக்குப் பிறகு தயாரிக்கவுள்ள படத்திற்கு "ஜெமினி" என்று பெயரிடப்பட்டுள்ளது.

விக்ரம் ஹீரோவாக நடிக்கிறார். கூடிய விரைவில் ஹீரோயின் யார் என்பது தெரிந்து விடும்.

படத்தை சரண் இயக்குகிறார். வரிகளை முத்துக்களாக வைரமுத்து கொட்ட, அதை பாட்டு எனும் மாலையாக இசையமைப்பாளர் பரத்வாஜ்கோர்க்கவுள்ளார்.

அட்டாகசமான செலவில் இந்தப் படம் தயாராகப் போகிறதாம். வழக்கம் போல ஜிகினா உலக உருண்டைகளை, அங்குமிங்கும் பறக்கவிட்டு, நடுவில்கண்ணாடி கிளாஸ்களுக்கு கீழே கலர் கலர் பல்புகள் மாறி, மாறி எரிய ஹீரோவும் ஹீரோயினும் ஜிகினா டிரஸ்ஸில் டிஸ்கோ டான்ஸ் ஆடப் போவதில்லை.

உண்மையிலேயே பிரமிக்க வைக்கும் வகையில் செலவு செய்து "ஜெமினி"யை ரிச்சாகத் தயாரிக்க ஏவி.எம். சகோதரர்கள் முடிவு செய்துள்ளனராம்.

சின்னத்திரையில் "ஆச்சி இன்டர்நேஷனல்", "நிம்மதி உங்கள் சாய்ஸ்" என்று கலக்கிக் கொண்டிருக்கும் பிரம்மாண்டமான ஏவி.எம். நிறுவனம்,இப்போதாவது மீண்டும் தங்கள் பக்கம் திரும்பிப் பார்த்துள்ளதே என்று நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார்கள் திரையுலகப் பெருமக்கள்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil