»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

ராஜீவ் காந்தி, மூப்பனார் ஆகியோரது பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு காமராஜர் இளைஞர் பேரவை சார்பில் நடிகர் விஜய், நடிகை ரம்பா ஆகியோருக்குராஜீவ காந்தி விருது வழங்கப்படுகிறது.

தமிழ்நாடு காமராஜ் தேசிய இளைஞர் பேரவை சார்பில் ராஜீவ்காந்தி மற்றும் மூப்பனார் பிறந்தநாள் விழா வரும் 31ம் தேதி நடக்கிறது.

இளைஞர் பேரவைத் தலைவர் கீழானூர் ராஜேந்திரன் விழாவுக்கு தலைமை தாங்குவார். இதையடுத்து வாழ்த்தரங்கம், கவியரங்கம், ராஜீவ் காந்தி விருதுவழங்கும் விழா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

ஆன்மிகம், விஞ்ஞானம், தியாகம், கலை, இலக்கியம், கல்வி, மருத்துவம் உள்ளிட்ட துறைகளிலும் சிறந்து விளங்குவோருக்கு ராஜீவ் காந்தி விருதுவழங்கப்பட உள்ளது.

மக்கள் தலைவரின் மாண்புகள் என்ற பெயரில் கவியரங்கம் நடக்கும். மக்கள் தலைவர் மணிமாலை என்ற கவிதை நூலை மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீஅருணகிரிநாத ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் வெளியிடுகிறார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil